loader
மாற்றத்தை உடனே எதிர்பார்க்காதீர்கள் ! - அமைச்சர் சேவியர் ஜெயகுமார்

மாற்றத்தை உடனே எதிர்பார்க்காதீர்கள் ! - அமைச்சர் சேவியர் ஜெயகுமார்

 கோலாலம்பூர்  அக்டோபர்-13

லெபோ அம்பாங் பாரம்பரிய வர்த்தகர்கள் சங்கத்தின் ஏற்பாட்டில் 10-வது முறையாக லெபோ அம்பாங்கில் தீபாவாளி கலைநிகழ்ச்சி நேற்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு வருகை புரிந்த நீர் நிலம், இயற்கை வள  அமைச்சர் சேவியர் ஜெயகுமார், இந்நாட்டு மக்கள் மாற்றம் வேண்டும் என மாற்றி வாக்களித்து தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சிதான் எங்கள் ஆட்சி. இல்லை என்றால் நான் அமைச்சராக  உங்கள் முன் நிற்க முடியாது. ஆனால்,   மக்கள் மாற்றத்தை உடனே எதிர்பார்ப்பது வருத்தம் அளிக்கிறது என அமைச்சர் சேவியர் தெரிவித்தார்.

மாற்றத்திற்கான முயற்சியை அரசாங்கம் எடுத்துவரும் வேளையில், அனைத்தையும் ஒரே நேரத்தில் மாற்றிவிடமுடியாது. அதற்குக் கால அவகாசம்  தேவை என அவர் குறிப்பிட்டார். ஆகையால், மக்கள் குறிப்பாக இந்திய சமுதாயம் சற்றுப் பொறுமை காத்து எங்கள் மீது நம்பிக்கை வைக்க வேண்டும் என  அவர் கேட்டுக்கொண்டார்.

லெபோ அம்பாங் பாரம்பரிய வர்த்தகர்கள் சங்கத்தின் தலைவர்  டத்தோ ஹாஜி அப்துல் ரசூல் பேசுகையில், லெபோ அம்பாங் வர்த்தகர்கள் பலவிதமான பிரச்னைகளை எதிர்நோக்கி வருகின்றனர். அந்நியத்  தொழிலாளர்  பற்றாக்குறை, வர்த்தக ரீதியில் அரசாங்க கொள்கை மாற்றத்தால் ஏற்படும் சிக்கல் மற்றும்  சாலை நெரிசல்,அந்நிய தொழிலாளர் பற்றாக்குறை தொடர்பாகப்  பல முறை  பரிந்துரைத்தும் சாதகமான பதில் இல்லை.

இதனால் இங்குப் பல கடைகள் மூடபட்டள்ளன. அதோடு  பல மேம்பாடு காரணமாக இங்குள்ள சாலைகள் சுறுக்கப்பட்டு, சாலை நெரிசல் ஏற்பட்டுள்ள்து. அதோடு,  இப்பகுதியில் ஏராளமான சமிக்ஞை விளக்குகள் உள்ளதால்,  எந்நேரமும் நெரிசலான இடமாக இந்த இடம் இருக்கிறது. பொது மக்கள் நெரிசலுக்குப் பயந்தே இங்கு வருவதைத் தவிர்க்கின்றனர். ஆகையால் அரசாங்கம் இதனைக் கவனத்தில் கொண்டு. இங்கு பார்கிங் வசதி மற்றும்  சாலை நெரிசலை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என டத்தோ ஹாஜி ரசூல் கேட்டுக்கொண்டார்.

இதனிடையே, இந்நிகழ்ச்சியில் மூன்று தமிழ்ப்பள்ளிகளைச் சேர்ந்த  மாணவர்களுக்குத் தீபாவளி அன்பளிப்பும், முதயவர்களுக்கு உதவியும் செய்யப்பட்டது. சுமார் 1000 பேர் கலந்துகொண்ட இந்நிகழ்ச்சியில், மாலிக் ஸ்ட்ரீம்  நிறுவனர் டத்தோ மாலிக்கும் கலந்துகொண்டார். ராகா புகழ் கவிமாறன் அறிவிப்பில் , தமிழ் நாட்டுப் பாடகர்களான வேல் முருகன், அனிதா மற்றும் உள்ளூர் கலைஞர்கள் பலரின் இசை மழையில்  சுமார் 6மணி நேரம் இந்நிகழ்ச்சி நடைபெற்றது!

0 Comments

leave a reply

Recent News