loader
விஜய்க்கு வில்லனாக விஜய் சேதுபதி!  பூஜையுடன் தொடக்கம்....

விஜய்க்கு வில்லனாக விஜய் சேதுபதி! பூஜையுடன் தொடக்கம்....

விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், சாந்தனு பாக்யராஜ் உள்ளிட்ட பலர் நடிக்கும்  தளபதி 64 படம் தற்போது உறுதியாகியுள்ளது.

எக்ஸ்பி பிலிம் கிரியேட்டர்ஸின் சேவியர் பிரிட்டோ இப்படத்தைத் தயாரிக்கிறார்.

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் படத்தை இயக்குகிறார்.

தலைப்பு இன்னும் வைக்கப்படாத நிலையில், இப்படத்திற்கான பூஜை, சென்னையில் நேற்று நடைபெற்றது.

விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், சாந்தனு பாக்யராஜ் மற்றும் இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் உள்ளிட்ட பலரும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

கேங்க்ஸ்டர் கதைக்களமாக உருவாகும் இப்படத்தில் விஜய் சேதுபதி இணைந்திருப்பது படத்திற்கான எதிர்பார்ப்பைல் கூட்டியிருக்கிறது.இதனால்,

ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர்.  விஜய் சேதுபதி இதில் முக்கிய வில்லனாக நடிக்கிறார் என்று கூறப்படுகிறது!

 

0 Comments

leave a reply

Recent News