loader
கொரொனா வந்தவர்களைத் தாக்கத் துடிக்கும் ஒமிக்ரான்! எச்சரிக்கையில் உலக நாடுகள்! எங்கள் தடுப்பூசி இருக்க பயம் ஏன்? என்று சொல்லும் ரஷ்யா!

கொரொனா வந்தவர்களைத் தாக்கத் துடிக்கும் ஒமிக்ரான்! எச்சரிக்கையில் உலக நாடுகள்! எங்கள் தடுப்பூசி இருக்க பயம் ஏன்? என்று சொல்லும் ரஷ்யா!


மாஸ்கோ: உலகை அச்சுறுத்தும் புதிய வகை கொரோனாவாக அடையாளம் காணப்பட்டுள்ளது ஒமிக்ரான்.

50 பிறழ்வுகளைக் கொண்டுள்ள உருமாறிய கொரோனா வைரசான ‘ஒமிக்ரான்’ தென் ஆப்பிரிக்காவில் முதலில் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வைரஸ், இதுவரை கண்டறியப்பட்டுள்ள கொரோனா வைரஸ்களில் ஆபத்தானதாக கூறப்படுகிறது.

இதனால் உலக நாடுகள் எச்சரிக்கையாக இருக்கின்றன. இருப்பினும் இந்த வைரஸ் தென் ஆப்பிரிக்காவில் தோன்றி, பெல்ஜியம், இஸ்ரேல், ஹாங்காங்குக்கு ஏற்கெனவே பரவி விட்டது.

இந்த வகை கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டவர்களை குறிவைத்து தாக்குகிறது என்ற தகவல் வெளியாகி உள்ளது.

தென்னாப்பிரிக்காவில் அடையாளம் காணப்பட்ட ஒமிக்ரான், ஒரே வாரத்தில் உலகின் பெரும்பாலான நாடுகளில் பரவி உள்ளது. அதிக எண்ணிக்கையிலான பிறழ்வுகள், முந்தைய வகைகளை  விட வேகமான பரவல், தற்போதைய தடுப்பூசிக்கு அடங்காதது என வெளியாகி வரும் பல தகவல்கள், ஒமிக்ரான் மீதான கவலையை அதிகரித்துள்ளன.

இந்த நிலையில் ஸ்புட்னிக் வி மற்றும் ஸ்புட்னிக் லைட் தடுப்பூசிகள் ஒமிக்ரான் கொரோனா வகைக்கு எதிராக நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கும் என்று ரஷிய சுகாதாரத்துறை நம்பிக்கை தெரிவித்துள்ளது.

மேலும், கொரோனா வகை வைரசில், எத்தகைய திரிபுகள் ஏற்பட்டாலும், அவற்றை எதிர்கொள்ளும் திறன்வாய்ந்தவை ஸ்புட்னிக் தடுப்பூசி என்றும், தேவைப்பட்டால் லட்சக்கணக்கான பூஸ்டர் தடுப்பூசிகளை தயாரிக்கவிருப்பதாகவும் ரஷியா தெரிவித்துள்ளது!

0 Comments

leave a reply

Recent News