loader
இன வாதப் பேச்சு! - ம.இ.கா இளைஞர் பிரிவு போலீஸ் புகார்

இன வாதப் பேச்சு! - ம.இ.கா இளைஞர் பிரிவு போலீஸ் புகார்

 

(வெற்றி விக்டர்)

கோலாலம்பூர், அக்டோபர்- 3:

மலேசிய பூ பந்து வீராங்கனை  கிஷோலினி, சிடீர்மான் கின்ன கால் இறுதி சுற்றில் இந்தோனிசிய வீராங்கனையிடம் தோல்வி கண்டதைத் தொடர்ந்து, போர்ஹான் சே ரஹிம் என்ற நபர் தனது சமூகவலைத்தளத்தில்  அந்த வீராங்கனையை இன ரீதியில் இழிவுபடுத்தி பேசியதோடு... தோட்டத்தில் இருந்து  சாதிக்க வந்த அந்தப் பெண்ணின்  தோட்ட வாழ்கையையும்  இழிவுபடுத்தியுள்ளார்.

அவரின் கருத்திற்கு மலேசியர்கள் வெகுவாக  கண்டனத்தைத் தெரிவித்து வந்தனர்.

இதனைக் கண்டிக்கும் வகையில் ம.இ.கா இளைஞர் பிரிவு  தேசிய செயலாளர் அண்ட்ரூ டேவிட்  இன்று டான் வாங்கி போலீஸ்  நிலையத்தில்  அந்த நபர் மீது போலீஸ் புகார் செய்தார்.

விளையாட்டில் எப்போதுமே மலேசியர்கள் ஒற்றுமையாக, ஒரே மலேசியர்களாக ஆதரவு கொடுத்துக் கொண்டாடுவோம். வெற்றி தோல்விகளை மலேசியர்களாக ஏற்போம். ஆனால் விளையாட்டில் இப்படிப்பட்ட இனவாத விமர்சனங்களை விதைக்கக் கூடாது அதற்கு முற்றுப் புள்ளி வகைக்க வேண்டும் என  அண்ட்ரூ தெரிவித்தார்.

அந்த வகையில் ம.இ.கா இளைஞர் பிரிவு  தேசிய ரீதியில் அந்த நபர் மீது புகார் கொடுக்கவிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

அதுமட்டுமின்றி  விளையாட்டுத் துறை அமைச்சுக்கும் இது தொடர்பாக ம.இ.கா இளைஞர் பிரிவு ஒரு கடிதத்தை வழங்கவிருப்பதாகவும் அண்ட் ரூ தெரிவித்தார்.

0 Comments

leave a reply

Recent News