loader
இனி 24 மணி நேர உணவகம் மலேசியாவில் சாத்தியம் கிடையாது!

இனி 24 மணி நேர உணவகம் மலேசியாவில் சாத்தியம் கிடையாது!

 

(வெற்றி விக்டர்/ ஆர். பார்த்திபன்)

கோலாலம்பூர், அக்டோபர்-1:

உணவகக் கடைகளை மூடக்கூடிய  அபாயத்தில் நாங்கள் உள்ள நிலையில், மலேசியாவிற்கே ஓர் அடையாளமாக இருந்த 24 மணி நேர  உணவுச் சேவை இனி சாத்தியப்படாது என,  பிரேஸ்மா மற்றும் பிரிமாஸ்  தலைவர்களான டத்தோ ஜவஹர் அலி மற்றும் சுரேஸ்தெரிவித்தனர்.

உணவுத்துறை என்பது ஒரு புனிதமான துறை. மனித இனத்தின் வாழ்வியலில் மிக முக்கியம் உணவு. ஆனால், மலேசியா நாட்டவர்கள் உணவகத் துறையில் வேலை செய்ய விருப்பப்படவில்லை என டத்தோ ஜவஹர் அலி தெரிவித்தார்.

ஆள்பற்றாக்குறையால் மலேசிய இந்திய முஸ்லீம் உணவக உரிமையாளர்களில் சுமார் 20 விழுக்காட்டினர் வியாபாரத்தைக் கைவிட்டு விட்டனர். இன்னும் 40 விழுக்காட்டினர் வியாபாரத்தைத் தொடரலாமா வேண்டாமா  என்ற குழப்பத்தில் உள்ளனர்.

வேலை செய்வதற்கு ஆள் இல்லை, இதில் எங்கே இருந்து முன்பு போல் 24 மணி நேரம் கடையை நடத்துவது? என ஜவஹர் அலி  தெரிவித்தார்.

அதே வேளையில், பிரிமாஸ் எனப்படும் மலேசிய இந்திய உணவக உரிமையாளர் சங்கத் தலைவர்  சுரேஸ் கூறுகையில்,  அந்நிய நாட்டவர்களைத் தருவிக்கும் செலவினங்களை விட, உள்நாட்டவர்களுக்கு வேலை வாய்ப்பு  வழங்குவதன் வழி எங்களுக்கு லாபம்தான்.

லெவி கட்டத் தேவை இல்லை. பெரிமிட் தேவை இல்லை, தங்கும் வசதி செய்து தர தேவை இல்லை. ஆனால், மலேசியர்கள் இந்தத் துறையில் ஆர்வம் காட்டாததால் எங்களது செலவினங்கள்  இரட்டிப்பாக  உயர்ந்தது. இருந்தாலும், வியாபரத்தை நடத்தினோம். இப்போது அதற்கும் தடை எற்பட்டு  வியாபாரத்தை இழுத்து மூட வேண்டிய சூழல். நாங்கள் வியாபாரத்தில் ஈடுபடவேண்டுமா? இல்லை அனைவரும் கூண்டோடு இழுத்து  மூடவேண்டுமா? அரசாங்கமே சொல்லட்டும் என சுரேஸ் தெரிவித்தார்.

இப்போது உணவகத்தில் ரோப்போட் சேவை செய்கிறது.  ஒரு ரோப்போட்  விலை 30 ஆயிரம் வெள்ளிக்கு மேல். சிறு வணிகர்கள் நாங்கள் அதை  வாங்க முடியுமா? இல்லை self service   என்ற முறைக்கு மலேசியர்கள் தயாரா? அரசாங்கமே சீர் தூக்கி பார்க்கட்டும் என சுரேஸ் தெரிவித்தார்.

0 Comments

leave a reply

Recent News