loader
'கண்மணி என் கண்மணி'  திலிப் வர்மனின் 100-வது பாடல்!

'கண்மணி என் கண்மணி' திலிப் வர்மனின் 100-வது பாடல்!

கோலாலம்பூர் ஜூலை -2

மலேசியாவில் தீவிர ரசிகர்களைக் கொண்டவர் பாடகர் திலிப் வர்மன். தனது அற்புதமான குரல் வளத்தால், சுமார் 16 ஆண்டுகள் மக்கள் மனதில் நீங்காமல் நிறைந்திருக்கிறார் இவர்.

அண்மையில், இவரின் 'கண்மணி என் கண்மணி' என்ற 100 -வது பாடல் பெட்டாலிங் ஜெயா புத்ரா இந்தெர்லெக் இண்டர்நேஷனல் கல்லூரியில் மாணவர்கள் மத்தியில் அறிமுகம் கண்டது.

டாக்டர் அண்ணாதுரை தயாரிப்பில் வெளியிடப்பட்ட இப்பாடலின் வரிகளை எழுதியவர் டாக்டர் அண்ணாதுரை.

'கண்மனி என் கண்மணி, பாடல் புத்ரா இந்தெர்லெக் கல்லூரியில் அறிமுகம் கண்டதன் நோக்கம்,

இக்கல்லூரி மாணவர்கள் தங்களது திறமைகளை வளர்த்துக் கொள்ள  வேண்டும் என்பதே அக்கல்லூரி நிர்வாக இயக்குனர் டாக்டர் பரதனின் எண்ணம். மாணவர்களுக்கு இசைக் கல்வியை நிச்சயம் வழங்குவேன்.  அதை திலிப் வர்மன், அசோகன், டாக்டர் அண்ணாதுரை, புவனேஸ்வரன் போன்றவர்களைக் கொண்டு  நடத்துவேன். அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றேன். நிச்சயம் நல்ல பதிலுடன் இக்கல்லூரி மாணவர்களுக்கு இசைக் கல்வி வழங்குவேன் என டாக்டர் பரதம் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் சில மாணவர்கள்  பாடல்களைப் பாடி, தங்களது திறமைகளை வெளிப்படுத்திய வேளையில், அம்மாணவர்களுக்கு, தங்கள் நிறுவனத்தின் அடுத்த வெளியீட்டில் வாய்ப்பு வழங்குவதாக புவனேஸ்வரன் மற்றும் அசோகன் நம்பிக்கை தெரிவித்தனர்!

0 Comments

leave a reply

Recent News