loader
லொஜிஸ்டிக் - போக்குவரத்துத் துறையைச் சேர்ந்தவர்கள் SMILE கடிதத்தைப் பயன்படுத்தலாம்!

லொஜிஸ்டிக் - போக்குவரத்துத் துறையைச் சேர்ந்தவர்கள் SMILE கடிதத்தைப் பயன்படுத்தலாம்!


கோலாலம்பூர், ஜூன் 6: லொஜிஸ்டிக் மற்றும் போக்குவரத்துத் துறையைச் சேர்ந்தவர்கள் 2021 ஜூன் 1 முதல் தேதியிட்ட SMILE (Sistem Maklumat Industri Logistik) அமைப்பின் கீழ் வழங்கப்பட்ட பயண ஒப்புதல் கடிதங்களை சாலைத் தடைகளில். பயன்படுத்தலாம்.

ஜூலை 3-16 முதல் சிலாங்கூர் மற்றும் கோலாலம்பூரில் உள்ள பல துணை மாவட்டங்கள் மற்றும் வட்டாரங்களில் மேம்படுத்தப்பட்ட இயக்கக் கட்டுப்பாட்டு ஆணையை அமல்படுத்தியதோடு, தேசிய மீட்புத் திட்டம் (என்ஆர்பி) அறிவிக்கப்பட்டதையும் பின்பற்றி இதைப் போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இருப்பினும், MCO கட்டத்திலிருந்து NRP க்கு மாறுவதைக் கணக்கில் கொண்டு திருத்தங்களுடன் சமீபத்திய கடிதத்தை இன்று SMILE அமைப்பிலிருந்து https://application.mot.gov.my என்ற வலைத்தளம் வழியாக பதிவிறக்கம் செய்யலாம்.

தற்போதுள்ள நிலையான இயக்க நடைமுறை (எஸ்ஓபி) அடிப்படையில் அத்தியாவசியமற்ற பொருட்களின் ஏற்றுதல் மற்றும் இறக்குதல் நடவடிக்கைகள் MCO அல்லாத பகுதிகளில் (நாடு தழுவிய அளவில்) அனுமதிக்கப்படும் என்று அமைச்சின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது!

 

0 Comments

leave a reply

Recent News