loader
800 கோடியில் 'பொன்னியின் செல்வன்'!  பொருத்தமான நடிகர்கள் இல்லை....  ப்ளீஸ் வேணாம் சார்  மணிரத்னத்துக்கு ரசிகர்கள் வேண்டுகோள்...

800 கோடியில் 'பொன்னியின் செல்வன்'! பொருத்தமான நடிகர்கள் இல்லை.... ப்ளீஸ் வேணாம் சார் மணிரத்னத்துக்கு ரசிகர்கள் வேண்டுகோள்...

'பொன்னியின் செல்வன்' படத்தை ரூ. 800 கோடி செலவில் எடுக்கப் போவதாகக் கூறப்படுகிறது. அமரர் கல்கியின் 'பொன்னியின் செல்வன்' நாவலை அடிப்படையாக வைத்து படம் எடுக்க உள்ளார் இயக்குநர் மணிரத்னம். 'பொன்னியின் செல்வனை'ப் படமாக்க வேண்டும் என்பது அவரது நீண்ட நாள் கனவு.  அந்தக் கனவு வெகு விரைவில் நிறைவேற உள்ளது. இரண்டு பாகங்களுக்கான பட்ஜெட் ரூ. 800 கோடியை தாண்டும் என்று கூறப்படுகிறது. படத்தை பாகுபலியை விடப் பிரமாண்டமாக எடுக்கப் போகிறாராம். கிராபிக்ஸ் பணிகள் ஆச்சரியப்படும் வகையில் இருக்குமாம். மணிரத்னம் தனது இத்தனை ஆண்டு கால சினிமா வாழ்க்கையில் இவ்வளவு பெரிய பட்ஜெட்டில் படம் எடுத்தது இல்லை. இதுதான் முதன் முறை ஆகும்.

'பொன்னியின் செல்வன்' கதைக்கு ரூ. 800 கோடி தாராளமாக செலவு செய்யலாம். அதில் தவறே இல்லை.

பொன்னியின் செல்வன் படத்தில் நடிக்க மணிரத்னம் தேர்வு செய்துள்ள நடிகர்கள், நடிகையர்களில் சிலர் அந்தக் கதாபாத்திரங்களுக்கு ஒத்து வர மாட்டார்கள் என்கிறார்கள் ரசிகர்கள். தயவு செய்து அவர்களை நடிக்க வைக்க வேண்டாம் சார் என்று கோரிக்கை விடுத்து வருகிறார்கள். பொன்னியின் செல்வன் போன்ற அற்புத படைப்பைப் படமாக எடுக்காமல் இருப்பதே நல்லது.

கற்பனையில் உள்ள கதாபாத்திரங்களைத் திரையில் காட்ட வேண்டாம். மணிரத்னம் இந்த முயற்சியை கைவிடுவது நல்லது என்று ரசிகர்கள் சமூக வலைதளங்களில் தொடர்ந்து தெரிவித்து வருகிறார்கள்!

 

0 Comments

leave a reply

Recent News