loader
இதுவரை தடுப்பூசி போட்டவர்கள்  346, 270  பேர்!

இதுவரை தடுப்பூசி போட்டவர்கள்  346, 270  பேர்!

 

 கோலாலம்பூர், ஏப்ரல் 8: கோவிட்-19 தேசிய தடுப்பூசித் திட்டதின் முதலாம் கட்டத்தில் நேற்று புதன்கிழமை வரை  346, 270  பேருக்கு இரண்டாவது தடுப்பூசி செலுத்தப்பட்டிருக்கிறது. அதே காலக்கட்டத்தில்  546,762  பேருக்கு முதலாவது தடுப்பூசி செலுத்தப்பட்டதாக சுகாதார அமைச்சர் டத்தோ ஶ்ரீ டாக்டர் அடாம் பாபா தெரிவித்துள்ளார்.

இதன்வழி, நாட்டில் முதலாவது மற்றும் இரண்டாவது தடுப்பூசி செலுத்தப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 893,032-கும்.தில், சிலாங்கூர், பேரா, சரவா, கோலாலம்பூர், மற்றும் சபா ஆகிய ஐந்து மாநிலங்களிலேயே அதிகமானோருக்குத் தடுப்பூசி செலுத்தப்பட்டிருக்கிறது.

மேலும், இதுவரை 8,235,692 பேர் தடுப்பூசி திட்டத்தில் தங்களைப் பதிந்துள்ளனர். இதில், சிலாங்கூரிலேயே மிக அதிகமானோர் அதாவது 2,224,996  பேர் இத்திட்டத்தில் தங்களைப் பதிந்துள்ளனர்.

தடுப்பூசி திட்டத்தின் முதற்கட்டத்தில், பிப்ரவரி முதல் ஏப்ரல் மாதம் வரை சுகாதார பணியாளர்கள் உட்பட, 5 லட்சம் முன்னணி பணியாளர்களுக்கு தடுப்பூசி செலுத்த திட்டமிடப்பட்டிருக்கிறது.

ஏப்ரல் தொடங்கி ஆகஸ்ட் வரையிலான இரண்டாம் கட்ட தடுப்பூசி திட்டத்தில் 60 வயதிற்கும் மேற்பட்டோர், ஆபத்தான நோயினால் பாதிக்கப்பட்டவர்கள், மாற்றுத்திறனாளிகள் உட்பட 940,000 பேருக்கு இந்தத் தடுப்பூசி செலுத்தப்படும் என்று தெரிகிறது.

இவ்வாண்டு மே மாதம் தொடங்கி 2022-ஆம் ஆண்டு பிப்ரவரி வரை மேற்கொள்ளப்படும் இத்திட்டத்தின் மூன்றாம் கட்டத்தில், 18 வயதிற்கும் மேற்பட்ட தனிநபர்கள் உட்பட ஒரு கோடியே 40 லட்சம் பேருக்கு இந்தத் தடுப்பூசியைச் செலுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக பெர்னாமா செய்தி வெளியிட்டுள்ளது!

 

0 Comments

leave a reply

Recent News