loader
GoBackModi மோடியின் வருகையால் டிரெண்டான ஹேஷ்டேக்!

GoBackModi மோடியின் வருகையால் டிரெண்டான ஹேஷ்டேக்!

தமிழகம் மற்றும் கேரளா என இரு மாநில சட்டசபைகளுக்கும் அடுத்து வரும் சில மாதங்களில் தேர்தல் நடக்கவிருக்கிறது. இதனையடுத்து மோடி இன்று தமிழகத்திற்கு வருகை புரிந்தார். மோடியின் வருகை அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது. அரசியல் களம் சூடுபிடிக்கும் இந்த நேரத்தில், ட்விட்டர் களமும் சூடுபிடித்திருக்கிறது.

தமிழகத்துக்கு மோடி வருவதை எதிர்ப்பு தெரிவிக்கும் நோக்கில் GoBackModi என்கிற ஹேஷ்டேக் நேற்று மலை முதலே டிரெண்டாகிக் கொண்டிருக்கிறது.

அதே போல கேரள வருகையை எதிர்க்கும் விதத்தில் PoMoneModi என்கிற ஹேஷ்டேக் டிரெண்டாகி வருகிறது.

இரண்டு மாதங்களுக்கு மேல் போராடி வரும் விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று வேளாண் சட்டங்களை மத்திய அரசு ரத்து செய்யாதது, குடியுரிமை திருத்தச் சட்டம், பெட்ரோல் - டீசல் விலை ஏற்றம், சமையல் எரிவாயு விலை ஏற்றம், பிரிவினைவாத அரசியல், மாநில சுயாட்சி அதிகாரங்களுக்கு எதிராக மத்திய அரசு செயல்படுவது, பெருநிறுவனங்களுக்கு சாதகமாக மத்திய அரசு செயல்படுவது, இந்தி மொழித் திணிப்பு எனப் குற்றச்சாட்டுகளை முன்வைத்து இந்திய அளவில் இந்த இரண்டு ஹேஷ்டேகுகளை கொண்டு ட்ரெண்ட் செய்யப்பட்டு வருகிறது!

0 Comments

leave a reply

Recent News