loader
கொரோனா தடுப்பூசிக்கு 35 ஆயிரம் கோடியை ஒதுக்கியுள்ளது இந்தியா!

கொரோனா தடுப்பூசிக்கு 35 ஆயிரம் கோடியை ஒதுக்கியுள்ளது இந்தியா!

2021-22-ஆம் ஆண்டுக்கான இந்திய அரசின் பட்ஜெட்டில், கொரோனா தடுப்பூசி தயாரிப்புப் பணிகளுக்கு ரூ.35 ஆயிரம் கோடி ஒதுக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த நடவடிக்கைக்கு கோவேக்சின் தடுப்பூசி தயாரித்து வழங்கிய பாரத் பயோடெக் நிறுவனம் பாராட்டு தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக அந்த நிறுவனத்தின் தலைவர் கிருஷ்ணா எல்லா வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘2021-22-ஆம் ஆண்டில் கொரோனா தடுப்பூசிக்காக ரூ.35 ஆயிரம் கோடி ஒதுக்கியிருப்பது, முன்னோக்கிய மிகப்பெரிய ஒரு அடி மட்டுமின்றி, தொலைநோக்கு சார்ந்த பட்ஜெட் அறிவிப்பாகும். கொரோனாவை தடுப்பதற்காக மிகப்பெரிய நிதி ஒதுக்கியிருப்பதன் மூலம், கொரோனா இல்லா இந்தியாவாக மாறும்’ என்று குறிப்பிட்டு உள்ளார்.

தேசிய சுகாதார திட்டத்துடன் கூடுதலாக ரூ.64,180 கோடி சுகாதார திட்டம் ஒன்றையும் அறிவித்திருப்பதை வரவேற்றுள்ளார்.   இது பொது சுகாதார திட்டங்களை வலுப்படுத்தும் எனவும் தெரிவித்து உள்ளார். நோய் தடுப்பு சுகாதாரம், குணமாக்கும் சுகாதாரம் மற்றும் உடல் நல்வாழ்வு போன்றவற்றில் அரசு கவனம் செலுத்துவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்!

0 Comments

leave a reply

Recent News