loader
கமல் ஹாசனுக்கு அறுவை சிகிச்சை! - மக்களின் அன்பே மருந்து என கமல் உருக்கம்

கமல் ஹாசனுக்கு அறுவை சிகிச்சை! - மக்களின் அன்பே மருந்து என கமல் உருக்கம்

 

உலக நாயகன் கமல் ஹாசனுக்கு சில வருடங்களுக்கு முன் காலில் ஓர் அறுவை சிகிச்சை நடந்தது.

இருந்தபோதிலும் சமீபகாலமாக மக்கள் சந்திப்பு மற்றும் பிக் பாஸ் நிகழ்ச்சிகளில் அதிக நேரம் நிற்கும் சூழல் ஏற்பட்டதால், கால் வலி அதிகரித்தது.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இதைக் குறிப்பிட்ட கமல்,  பிக் பாஸ் நிகழ்ச்சியின் இறுதிப் போட்டியை முடித்துவிட்டு  நேராக மருத்துவமனைக்குச் செல்கிறேன் எனக்  கூறியிருந்தார்.

இதனிடையே  நேற்று  நள்ளிரவு  கமல் ஹாசன் ஒரு பதிவை டுவிட்டரில் பதிவேற்றம் செய்துள்ளார்.

"சிகிச்சை  வெற்றிகரமாக முடிந்தது... ராமச்சந்திரா மருத்துவமனை பணியாளர்களுக்கு நன்றி.... காயம் ஆறும் வரை இணையத்தில் நடமாட்டமும் உங்கள் இதயத்தில் உறவாடலும் தொடரும். மக்களின் அன்பே மருந்து... விரைவில் நேரில் சந்திப்போம்" என தனது டுவிட்டர் அகப்பக்கத்தில் பதிவு செய்துள்ளார் கமல்.

0 Comments

leave a reply

Recent News