loader
அவசர நிலை & MCO  மலேசிய மருத்துவ சங்கம் ஆதரவு!

அவசர நிலை & MCO மலேசிய மருத்துவ சங்கம் ஆதரவு!

பெட்டாலிங் ஜெயா, ஜன 12:  அவசரகால நிலை மற்றும் இயக்கக் கட்டுப்பாட்டு ஆணையை (MCO) பிறப்பித்தமைக்கு முழு ஆதரவை அளிப்பதாக மலேசிய மருத்துவ சங்கம் (MMA) தெரிவித்துள்ளது.

MMA தலைவர் பேராசிரியர் டத்தோ டாக்டர் சுப்பிரமணியம் முனியாண்டி  இது குறித்து மாமன்னருக்கு நன்றி தெரிவித்துள்ளதோடு, நிலைமையை நிர்வகிக்க அரசாங்கத்திற்கு உதவுவதாகவும் கூறினார்.

செவ்வாய்க்கிழமை (ஜனவரி 12) மாலை அறிவிக்கப்படும் MCO -  SOP நடைமுறைகளை முழுமையாகக் கடைபிடிப்பதன் மூலம் பொதுமக்கள் தங்கள் முழு ஆதரவையும் வழங்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.

கோவிட் -19 சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருவதால், இரண்டாவது MCO உண்மையில் அவசியம் என்று அவர் வலியுறுத்தினார்.

தொற்று விகிதம் தற்போதைய R0-லிருந்து 1.1 முதல் 1.2 வரை குறையவில்லை.  நாட்டில் கண்டறியப்பட்ட இங்கிலாந்தின் உரு மாறிய கொரோனா பி 117 கோவிட் சம்பவமும் கவலை அளிப்பதாக உள்ளது என்று அவர் ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.

கோவிட் -19 பெருக்கத்தால் நாட்டின் அனைத்து பொது மருத்துவமனைகளும் மூழ்கியுள்ளதாகவும், சுகாதாரப் பணியாளர்கள் கடுமையான அழுத்தங்களுக்கு உள்ளாகியுள்ளதாகவும் அவர் கூறினார்.

அரசு மருத்துவமனைகளில் கோவிட் -19 நோயாளிகளின் சுமை அதிகரித்து வருவதால், இது கோவிட் -19 அல்லாத நோயாளிகளை மற்றும் நிர்வாகத்தை பாதிக்கக்கூடும் என்பதால், சுகாதார அமைச்சகம் தனியார் சுகாதாரத்துறையுடன் பணியாற்ற வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்!

 

0 Comments

leave a reply

Recent News