loader
சீனா, இந்தியாவோடு கேம் ஆடுவதை அனுமதிக்கமாட்டோம்!  - பிரான்ஸ்

சீனா, இந்தியாவோடு கேம் ஆடுவதை அனுமதிக்கமாட்டோம்! - பிரான்ஸ்

புதுடெல்லி: புதுடெல்லியில் இந்திய தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலுடன்  பிரான்ஸ் அதிபர்  இமானுவல் மேக்ரானின் தூதரக ஆலோசகரான இம்மானுவேல் பொன்னே பேச்சு வார்த்தை நடத்தினார்.

இது குறித்து அவர் பேசுகையில், ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சிலில், இந்தியாவுக்கெதிராக சீனா கேம் ஆடுவதை அனுமதிக்கமாட்டோம் என்று தெரிவித்தார்.

எப்போதெல்லாம் இந்தியாவுக்கு நேரடியாக அச்சுறுத்தல் ஏற்படுகிறதோ, அப்போதெல்லாம் இதை நாங்கள் தெளிவுபட தெரிவித்துள்ளோம் . காஷ்மீர் விவகாரமானாலும் சரி, நாங்கள் ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவுக்கு ஆதரவாகத்தான் இருந்து வந்துள்ளோம்.

வழக்கம்போல கேம் ஆடும் சீனாவை நாங்கள் கேம் ஆட அனுமதித்ததில்லை. இமயமலை விஷயத்தில் நாங்கள் வெளியிட்டுள்ள அறிக்கையை பாருங்கள், நாங்கள் மிகவும் தெளிவாக இருக்கிறோம்.வெளிப்படையாகவும், சீனாவுக்கு தனிப்பட்ட முறையிலும் நாங்கள் தெரிவிப்பது என்னவென்றால், நாங்கள் எப்போதும் ஒரே நிலைப்பாட்டில்தான் உள்ளோம் என்பதுதான் என்று அவர் கூறினார்.

0 Comments

leave a reply

Recent News