loader
5.68 கோடி பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர்!

5.68 கோடி பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர்!


ஜெனீவா: உலகம் முழுவதும் தற்போது 2-வது கட்ட கொரோனா அலை அமெரிக்காவிலும், ஐரோப்பிய நாடுகளிலும் தனது கோர முகத்தைக் காட்டி வருகிறது.

இந்தச் சூழலில் இங்கிலாந்தில் கண்டறியப்பட்ட புதிய வகை கொரோனா வைரஸ் 8 ஐரோப்பிய நாடுகளில் பரவியுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

இங்கிலாந்தில் கண்டறியப்பட்டுள்ள புதிய வகை கொரோனா வைரசான வி.யு.ஐ. 202012/01, 70 சதவீதம் அதிவேகமாகப் பரவுகிற தன்மையைக் கொண்டுள்ளதால் ‘சூப்பர் ஸ்பிரெடர்’ என அழைக்கப்படுகிறது. இது கொத்து, கொத்தாக மக்களுக்குப் பரவுகிற தன்மையைக் கொண்டிருக்கிறது.

இந்நிலையில் உலகம் முழுவதும் தற்போதைய நிலவரப்படி, 8,07,10,850 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 5,68,99,243 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 17 லட்சத்து 64 ஆயிரத்து 374 பேர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா தொற்றுக்கு தற்போது 2,20,47,233 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 1,05,611 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

0 Comments

leave a reply

Recent News