loader
தேவையின்றி வெளியில் செல்லாதீர்கள்! - சுகாதாரத்துறை எச்சரிக்கை!

தேவையின்றி வெளியில் செல்லாதீர்கள்! - சுகாதாரத்துறை எச்சரிக்கை!

புத்ராஜெயா, டிசம்பர் 24: : சிலாங்கூர் தொடர்ந்து அதிக எண்ணிக்கையிலான கோவிட் -19 நோய்த்தொற்றுகளைப் பதிவு செய்து வருவதால், மக்கள் தேவையின்றி வெளியே செல்ல வேண்டாம் என்று சுகாதார அமைச்சகம் எச்சரித்துள்ளது.

சுகாதாரத்துறை தலைமை இயக்குநர் டான் ஸ்ரீ டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா தொடர்ந்து எட்டு நாட்களாக, சிலாங்கூரில் அதிக எண்ணிக்கையிலான கோவிட் -19 வழக்குகள் பதிவாகியுள்ளதைச் சுட்டிக்காட்டியுள்ளார்.

சிலாங்கூரில் கொரோனா சமூகத் தொற்றாகப் பரவி வருவதால், பொதுமக்கள் தேவையின்றி வெளியில் செல்வதை அவசியம் தவிர்க்க வேண்டும். வெளியில் செல்வதர்கு எந்தவொரு முக்கிய காரணமும் இல்லாவிட்டால், சிலாங்கூர் குடியிருப்பாளர்கள் வீட்டிலேயே இருக்குமாறு அறிவுறுத்துகிறோம் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

நெரிசலான இடங்களைத் தவிர்த்து, ஆரோக்கியமான சுகாதாரத்தைக் கடைப்பிடிக்குமாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

இத்தகைய தடுப்பு நடவடிக்கைகள்தான் கோவிட் -19 க்கு எதிராக இப்போது எங்களுக்கு உள்ள ஒரே தடுப்பூச என்று டாக்டர் நூர் ஹிஷாம் ஒரு செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்!

 

0 Comments

leave a reply

Recent News