loader
100 டாக்சி ஓட்டுநர்களுக்கு டத்தோ வினோத் உதவி!   வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் மக்களுக்கு  மனிதநேயத்தோடு உதவி வழங்குவோம் என வலியுறுத்து!

100 டாக்சி ஓட்டுநர்களுக்கு டத்தோ வினோத் உதவி! வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் மக்களுக்கு மனிதநேயத்தோடு உதவி வழங்குவோம் என வலியுறுத்து!

 

கெப்போங், டிச.23: கோவிட் 19 காலகட்டத்தில் வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் மக்களுக்கு  மனிதநேயத்தோடு உதவிகள் வழங்க வேண்டும் என்று கெப்போங்கில் 100 டாக்சி ஓட்டுநர்களுக்கு உதவிப் பொருட்கள் வழங்கிய தொழிலதிபர் டத்தோ வினோத் வலியுறுத்தியுள்ளார்.

வசதி குறைந்த மக்களுக்கு மனிதநேயத்துடன் உதவி வழங்குவதை நான் வழக்கமாக கொண்டிருக்கிறேன். இறைவன் எனக்குக் கொடுத்திருப்பதை கொஞ்சம் மக்களுக்கு வழங்குகிறேன் என்று தாமான் கெப்போங் ம.இ.கா கிளைத் தலைவருமான டத்தோ வினோத் கூறினார்.

நாளை என்பது நமக்குச் சொந்தமில்லை. இன்றைய நாளுக்கு மட்டும் சொந்தக்காரர்களாக இருக்கும் நாம் முடிந்தவரை வசதி குறைந்த மக்களுக்கு உதவி வழங்க முன்வர வேண்டும். நான் வாழ்க்கையில் மிகவும் கஷ்டப்பட்டு வந்துள்ளதால் மற்றவர்களின் துன்பத்தை உணர முடிகிறது. இதன் காரணமாகவே ஏழை மக்கள், வசதி குறைந்த பி40 மக்களுக்கு இன்றளவும் உதவி வழங்கி வருவதாக MN GLOBAL TRIPS SDN BHD நிறுவனத்தின் உரிமையாளருமான டத்தோ வினோத் தெரிவித்தார்.

ஒவ்வொரு மாதமும் ம.இ.கா தாமான் கெப்போங் கிளையில் உள்ளவர்களின் பிறந்தநாளைக் கொண்டாடுவதோடு 40 பி40 மக்களுக்கு, குறிப்பாக RELA, PEMADAM என்று பலதரப்பட்ட மக்களுக்கு உதவிப் பொருட்களை மாதந்தோறும் வழங்கி வருவதாக டத்தோ வினோத் கூறினார்.

இதன்வழி ஒவ்வொரு மாதமும் இங்கு உதவிப் பொருட்கள் வழங்கும் நிகழ்வு தொடர்ந்து கொண்டே இருக்கிறது. இந்நிலையில் ஒரு காணொளியைப் பார்த்த போது டாக்சி ஓட்டுநர்கள் எதிர்நோக்கும் துயரங்களைக் கண்டு முதல் கட்டமாக 100 டாக்சி ஓட்டுநர்களுக்கு உதவிப் பொருட்களை வழங்கியதாக டத்தோ வினோத் குறிப்பிட்டார்.

கடந்த 23 ஆண்டுகளாக சிறுவர்களுக்கும் முதியவர்களுக்கும் ஆதரவற்றோர் இல்லத்தை நடத்தி வரும் டத்தோ வினோத், செயிண்ட் ஜோன் விலாயா கெரேத்தாப்பியில் இரண்டாவது உயர் பதவியில் இருக்கிறார்.

Persatuan  Sukarelawan Malaysiaவில் இருப்பதால், பிள்ளைகளுக்கு இலவசமாக CPR கற்றுத் தருகிறார். 

மக்கள் இலவசமாக பயன்படுத்திக் கொள்ள அம்புலன்ஸ் வாங்கியிருப்பதோடு, மக்கள் பயன்பாட்டிற்காக இலவச பிரேத வண்டி சேவையையும் தொடங்கவிருப்பதாக டத்தோ வினோத் தெரிவித்தார்.

இந்த டாக்சி ஓட்டுநர்களுக்கு உதவிப் பொருட்கள் வழங்கும் திட்டத்திற்கு KK MART, ASIA SOHAM நிறுவனம், RELA, PEMADAM கெப்போங், DBKL உள்ளிட்ட பலர் ஆதரவு வழங்கியுள்ளதாக டத்தோ வினோத் கூறினார்.

இந்த உதவிப் பொருட்களை 100 டாக்சி ஓட்டுநர்கள், தங்கள் டாக்சியில் வந்து பெற்றுக் கொண்டனர். இந்நிகழ்வில் டத்தோ வினோத்துடன் தாமான் கெப்போங் ம.இ.கா தலைவர்கள் உள்ளிட்டப் பலரும் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது!

0 Comments

leave a reply

Recent News