loader
ரஜினியின் கட்சி பெயர், சின்னம் இதுதானாம்!

ரஜினியின் கட்சி பெயர், சின்னம் இதுதானாம்!

நடிகர் ரஜினி தொடங்க இருக்கும் புதிய கட்சியின் பெயர் 'மக்கள் சேவை கட்சி' என்று தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் ரஜினிகாந்த் அடுத்த மாதம் கட்சி தொடங்குவதாக அறிவித்துள்ளார். இதற்கான அறிவிப்பை டிசம்பர் 31 ஆம் தேதி தெரிவிப்பேன் என்றும் கூறியுள்ளார். இதனால் அவரது ஆதரவாளர்கள் படு குஷியில் உள்ளனர்.

இந்நிலையில் நடிகர் ரஜினி 'மக்கள் சேவை கட்சி' என்ற பெயரில் புதிய கட்சியைத் தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

அதேபோல் பாபா முத்திரை சின்னத்தை கேட்ட நிலையில் 'மக்கள் சேவை கட்சி'க்கு ஆட்டோ சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

ஏற்கனவே ரஜினியின் அண்ணன் சத்யநாராயணா ரஜினியின் கட்சியைப் பதிவு செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது என்று கூறியது குறிப்பிடத்தக்கது!
 

0 Comments

leave a reply

Recent News