loader
மீண்டும் கமல்! தொடங்கியாச்சு 'பிக் பாஸ் -3'!

மீண்டும் கமல்! தொடங்கியாச்சு 'பிக் பாஸ் -3'!

தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 'பிக் பாஸ்' நிகழ்ச்சி மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. இரண்டு சீஸன் முடிந்துவிட்ட நிலையில், தற்போது மூன்றாவது சீஸனும் விரைவில் தொடங்கவிருக்கிறதாம். வழக்கம்போலவே கமல்ஹாசனே இந்த சீஸனையும் ஏற்று நடத்துகிறார்.

மூன்றாவது சீஸனுக்கான புரொமோ ஷூட் நேற்று தொடங்கியது. சென்னை பூந்தமல்லி ஈ.வி.பி வளாகத்தில் அமைக்கப்பட்டிருக்கும் அதே பிரமாண்ட பிக் பாஸ் வீட்டையொட்டிய செட்டில், கமல்ஹாசன் கலந்துகொண்ட காட்சிகள் தற்போது ஷூட் செய்யப்பட்டு வருகின்றன.

இம்முறை கலந்துகொள்ள இருக்கும் போட்டியாளர்களைத் தேர்ந்தெடுக்கும் நடைமுறைகளும் தொடங்கிவிட்டன. அடுத்த சில நாள்களில் புரொமோ வீடியோ சேனலில் ஒளிபரப்பாகலாமெனத் தெரிகிறது. ஜூன் இரண்டாவது வாரத்தில் ஷோ தொடங்க இருக்கிறது.
முதல் சீஸனில் ‘ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது’ என்ற கமல், அடுத்த சீஸனில் ‘நீங்க நல்லவரா கெட்டவரா’ என்றார்.

தன்னுடைய அரசியல் முயற்சிக்கான பலன் தேர்தல் முடிவுகள் மூலம் அடுத்த சில தினங்களில் தெரிய இருக்கிற சூழலில் பிக் பாஸ் சீஸன் 3-ல் கமல் என்ன சொல்வார் என்பது பெரிய எதிர்பார்ப்பாக உள்ளது!

0 Comments

leave a reply