loader
தமிழ்ப்பள்ளிகளின் மேம்பாட்டிற்கு தனி திட்டவரைவுக் குழு  அவசியம்!  - நஜீப் கருத்து

தமிழ்ப்பள்ளிகளின் மேம்பாட்டிற்கு தனி திட்டவரைவுக் குழு அவசியம்! - நஜீப் கருத்து

வெற்றி விக்டர் 

கோலாலம்பூர் நவம்பர்-28

2021 ஆம்  ஆண்டுக்கான பட்ஜெட்டில், தமிழ்ப்பள்ளிகளின் மேம்பாட்டிற்காக 29.98 மில்லியன் நிதி மட்டுமே ஒதுக்கப்பட்ட நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக  'தமிழ் லென்ஸ்' எழுப்பிய கேள்விகளுக்குப் பதில் அளித்த முன்னாள் பிரதமர் டத்தோ ஸ்ரீ நஜீப் துன் ரசாக், தமிழ்ப்பள்ளிகளின் மேம்பாட்டிற்குச் சிறப்பு திட்டவரைவுக் குழு அவசியம் என்றார்.

தான் பிரதமராக இருந்த காலகட்டத்தில் தமிழ்ப் பள்ளியின் மேம்பாட்டிற்காக 30 மில்லியனிலிருந்து 50 மில்லியன் வரை நிதி ஒதுக்கியிருந்ததாகவும்,  தமிழ்ப்பள்ளிகளின் மேம்பாட்டுக்காகத்  திட்டவரைவுக் குழு ஒன்றை அமைத்து, அதன் வழி பல தமிழ்ப்பள்ளிகளை உருவாக்கியதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இப்போதைய சூழலில், அப்படி ஒரு திட்டவரைவுக் குழு தேவை என்றும், அது அவசியம் தொடரவேண்டும் எனவும் டத்தோ ஸ்ரீ நஜீப் வலியுறுத்தினார்.

அப்படி ஒரு குழு அமைத்திடாத பட்சத்தில், மேம்பாட்டு நீரோட்டத்தில் இருந்து தமிழ்ப்பள்ளிகள் விலகக்கூடும் என்றும், எனவே அரசாங்கம் தமிழ்ப்பள்ளிகளின் மேம்பாட்டுத் திட்டவரைவைத் தொடரவேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்!

0 Comments

leave a reply

Recent News