loader
கிள்ளான் உட்பட 4 மாவட்டங்களில் CMCO உத்தரவு!  அனைத்து பள்ளிகளும் மூடப்படுகின்றன!

கிள்ளான் உட்பட 4 மாவட்டங்களில் CMCO உத்தரவு! அனைத்து பள்ளிகளும் மூடப்படுகின்றன!

கோலாலம்பூர், அக் 7: நாட்டில் நான்கு மாவட்டங்களுக்கு CMCO உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.

சபாவில் மூன்று மாவட்டங்களும், சிலாங்கூரில் ஒரு மாவட்டமும் நிபந்தனைக்குட்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவின் கீழ் வைக்கப்படும் என்று தற்காப்பு அமைச்சர் இஸ்மாயில் சப்ரி யாகோப் இன்று அறிவித்தார்.

சபாவில் சண்டாகான், பாபார் மற்றும் துவாரன் ஆகிய இடங்களுக்கும், சிலாங்கூரில் கிள்ளான் மாவட்டத்திற்கும் இந்தக் கட்டுப்பாடு விதிக்கப்படுகிறது. 

இதனை அடுத்து கிள்ளானில் உள்ள 142 பள்ளிகளும், சபாவில் 242 பள்ளிகளும் அக்டோபர் 8 முதல் அக்டோபர் 23 வரை மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் சிவப்பு மண்டல பகுதிகளில் பள்ளிகளை மூடுவதற்கான அரசாங்கத்தின் முடிவு தொடர்பாக அக்டோபர் 6 ம் தேதி பிரதமரின் சிறப்பு செய்திக்கு ஏற்ப, சுகாதார அமைச்சினால் சிவப்பு மண்டலங்களாக உறுதிப்படுத்தப்பட்ட பகுதிகளில் உள்ள அனைத்து பள்ளிகளும் மூடப்படும் என்று இன்று புதன்கிழமை ஓர் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  இது  அமைச்சின் கீழ் உள்ள அனைத்து தொடக்க மற்றும் இடைநிலைப் பள்ளிகளையும், அமைச்சில் பதிவுசெய்யப்பட்ட தனியார் பள்ளிகளையும் உள்ளடக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

வகுப்புகள் குறித்து, மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் வீட்டு அடிப்படையிலான கற்றலை மீண்டும் தொடங்குவார்கள் என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது.

எஸ்.பி.எம் தேர்வுகளை நடத்தும் பள்ளிகளைப் பொறுத்தவரை, அவற்றை பின்னர் தேதிக்கு மாற்றியமைக்க முடியும் என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது.

நாடு முழுவதிலும் கோவிட் -19 நிலைமையை அமைச்சகம் தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும், இந்த விஷயத்தில் தேசிய பாதுகாப்பு கவுன்சில் மற்றும் சுகாதார அமைச்சகத்துடன் நெருக்கமாக செயல்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிற மாவட்டங்களில் பள்ளிகள் மூடப்படுவது தொடர்பான அறிவிப்பும் அவ்வப்போது செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது!

0 Comments

leave a reply

Recent News