loader
நாளை நமதே!  கோவையில் மோடி

நாளை நமதே! கோவையில் மோடி

நாடாளுமன்றத் தேர்தல் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், கோயம்புத்தூரில் இன்று தனது பிரசாரத்தைத்  தொடங்கினார் மோடி.

கோவை கொடிசியா மைதானத்தில் இக்கூட்டம் நடைபெற்றது.

``தமிழ் மக்களுக்கு என்னுடைய அன்பான வணக்கம். மருதமலை முருகனுக்கு அரோகரா" என்று சொல்லித் தனது உரையை ஆரம்பித்தார் மோடி. 

``தமிழக மக்கள் அனைவருக்கும் இந்தக் காவலாளியின் வணக்கம். நடக்கக் கூடிய தேர்தல் வருங்காலத்தைக் கணிக்கக் கூடிய முக்கியத் தேர்தல். மக்களுக்குத் தொடர்ந்து நிலையான ஆட்சி அளிக்க நம்முடைய கூட்டணி விரும்புகிறது. மக்களுக்குகாகடச் சேவை செய்ய விரும்பும் கூட்டணி நம்முடையது. ஆனால், எதிரணி அதிகாரத்தைக் கைப்பற்ற மட்டுமே செயல்படுகிறது. 

நம் நாட்டுக்கு எப்போதெல்லாம் பாதுகாப்புத் தேவையோ, அப்போதெல்லாம் நாம் அதில் அதிகம் கவனம் செலுத்தி வருகிறேம். தமிழகத்தில் ராணுவத் தளவாடங்களை அதிகளவு உருவாக்க உள்ளோம். அதன் மூலம் அதிக வேலைவாய்ப்புகள் கிடைக்கவுள்ளது. எதிரணிக்கு நாட்டின் பாதுகாப்பில் சிறிதளவு கூட அக்கறையில்லை. 1998-ஆம் ஆண்டு, கோவையில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவம் மறக்க முடியாது. அப்போது, மத்தியில் காங்கிரஸும், இங்கே தி.மு.க-வும் ஆட்சியில் இருந்தன. அவர்களால் ஒன்றும் செய்ய முடியவில்லை. அது பழைய இந்தியா. இது பழைய இந்தியா இல்லை. புதிய இந்தியா. நம்முடைய புதிய இந்தியாவுக்கு எதிரிகள் எது கொடுத்தாலும், அதை வட்டியும் முதலுமாகத் திருப்பிக் கொடுப்போம்.
தேசியத்தைப் பற்றி பேசுவது என்ன குற்றமா, நான் தேசியத்தைப் பற்றி பேசுவதை எதிர்க்கட்சிகள் குற்றமாகச் சொல்லி வருகின்றன. இந்தத் தேசிய உணர்வால்தான், 18,000 கிராமங்களுக்கு மின்சாரம் கொடுக்க முடிந்தது. ஏழை மக்களுக்கு ஒன்றரை கோடி வீடுகள் கட்டிக் கொடுக்க முடிந்தது. நாங்கள் இறுதி வரை தேசியவாதிகளாகத்தான் இருப்போம். காங்கிரஸ் கட்சிகள் தேர்தல் அறிக்கை தீவிரவாதிகளுக்கு மகிழ்ச்சியளிக்கும் விதத்தில் அமைந்துள்ளது. தி.மு.க, காங்கிரஸுக்கு வாக்களித்தால் மக்கள் வலிகளைச் சந்திக்க நேரிடும். இதை நான் சொல்லவில்லை. அவர்கள் கட்சியின் மூத்த தலைவர்களே குறிப்பிடுள்ளார்கள். மேலும், காங்கிரஸ் தி.மு.க காரர்கள் பெண்களுக்கு எதிரானவர்கள். தி.மு.க மூத்த தலைவர்கள், சட்டசபையில் வைத்து நம் அம்மா ஜெயலலிதாவிடம் எப்படியெல்லாம் நடந்துகொண்டார்கள் என்பதை நாம் மறந்து விடக்கூடாது.

காங்கிரஸுக்கு மீண்டும் வாக்களித்தால் நம் பாரம்பரியத்தை அழித்து விடுவார்கள். காங்கிரஸ் - கம்யூனிஸ்ட்கள் இணைந்து கேரளாவின் கலாசாரத்தை சீரழிக்கிறார்கள். வாக்கு வங்கிகளுக்காக கீழ்த்தரமான அரசியல் செய்கிறார்கள். ஐயப்பனின் புனிதத்தைக் கெடுத்து வருகிறார்கள். நான் மக்களின் உணர்வுகளுக்கு மிகவும் முக்கியத்துவம் கொடுக்கிறேன், உங்களின் உணர்வுகளைக் காக்க இந்தக் கூட்டணி செயல்படும். எப்படி முதல் சம்பளத்தை நல்ல காரியத்துக்குப் பயன்படுத்துவோமோ, அதேபோல முதல் தலைமுறை வாக்காளர்கள், தங்களது வாக்கை நாட்டின் முன்னேற்றத்துக்காக அளிக்க வேண்டும். நாளும் நமதே.. நாற்பதும் நமதே" என்றார்!

 

0 Comments

leave a reply

Recent News