loader
தாவார் - சிவகங்கா கிளஸ்டர் பரவல்! டெம்கோ உத்தரவு அமல்!

தாவார் - சிவகங்கா கிளஸ்டர் பரவல்! டெம்கோ உத்தரவு அமல்!

கோலாலம்பூர், ஆகஸ்ட் 27 - தாவார் மற்றும் சிவகங்கா கிளஸ்டர்களில் கோவிட் -19 வைரஸ் ஒரே மரபணு மாற்றத்தைக் கொண்டிருப்பதாக மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் மேற்கொண்ட வைராலஜி ஆராய்ச்சி சுட்டிக்காட்டுவதாக சுகாதார இயக்குநர் டான்ஸ்ரீ டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா இன்று தெரிவித்தார்.

இந்த ஆராய்ச்சிக்கு மொத்தம் 14 மாதிரிகள் எடுக்கப்பட்டன. அதில் நான்கு மாதிரிகள் வைரஸில் D614G பிறழ்வு இருப்பதைக் காட்டுகின்றன என்று டாக்டர் நூர் ஹிஷாம் கூறினார்.

இதனையடுத்து சிவகங்கை தொற்று மற்றும் தாவார் தொற்றுபிரண்டும் ஒரே குழுவில் இருந்து வந்தவை என்பதைக்  கண்டறிந்ததாக அவர் கூறினார்.

சிவகங்கா கிளஸ்டரில் உள்ள நோயாளிகளிடமிருந்து எடுக்கப்பட்ட மாதிரிகளில் D614G வகை என அடையாளம் காணப்பட்ட ஒரு பிறழ்வை சுகாதார அமைச்சகம் முன்பு கண்டறிந்தது.

இந்நிலையில், கெடாவின் அமான் ஜெயாவில் டெம்கோ உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளதாகவும், இன்று இரவு நள்ளிரவுக்குப் பிறகு நடைமுறைக்கு வரும் என்றும் அமைச்சர் இஸ்மாயில் சப்ரி தெரிவித்துள்ளார்.

கெடாவில் தாவார் கிளஸ்டரால் கோவிட் -19 சம்பவங்கள் அதிகரித்ததைத் தொடர்ந்து டெம்கோ எனப்படும் இலக்கு மேம்படுத்தப்பட்ட கட்டுப்பாடு அறிவிக்கப்பட்டுள்ளது!

0 Comments

leave a reply

Recent News