loader
நன்றி 'பாஸ்'! - முகைதீன்

நன்றி 'பாஸ்'! - முகைதீன்

பாஸ் கட்சியின் தலைவர் அப்துல் ஹாடி அவாங் மற்றும் பாஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள், தேசிய கூட்டணி அரசாங்கத்திற்கு அளித்த ஆதரவையும் ஊக்கத்தையும் தாம் பாராட்டுவதாக பிரதமர் முகைதீன் யாசின் கூறியுள்ளார்.

பாஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பாஸ் செனட்டர்களுடனான நிகழ்வு ஒன்றில் தாம் கலந்து கொண்டதாக முகநூலில் பதிவேற்றிய செய்தியில் முகைதீன் இவ்வாறு தெரிவித்தார்.

முவாபாக்காட் நேஷனலில்  பெர்சத்து கட்சி பங்கேற்பதை வரவேற்ற பாஸ் தலைமைக்கு மிகவும் நன்றியுள்ளவனாக இருப்பதாக பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

அப்துல் ஹாடி அவாங், பாஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பாஸ் செனட்டர்களுடன் பிரதமர் எடுத்து கொண்ட  புகைப்படங்களும் அதில் வெளியாகியுள்ளன!

0 Comments

leave a reply

Recent News