loader
முகக் கவசத்தின் விலையை குறைக்க அரசாங்கம் முடிவு!

முகக் கவசத்தின் விலையை குறைக்க அரசாங்கம் முடிவு!

 

கோலாலம்பூர், ஆகஸ்ட் 11:  முகக் கவசத்தின் விலையை ஒரு வரம்புக்குள் கொண்டு வருவதற்கு அதன் விலையை குறைக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

அவ்வகையில் மூன்று அடுக்கு சுவாசக் கவசம் ஒன்றின் விலையை, ஒரு ரிங்கிட்டாக குறைப்பதற்கு அரசாங்கம் இணக்கம் தெரிவித்திருக்கிறது.

ஆகஸ்ட் 1-ஆம் தேதி தொடங்கி நெரிசலான பொது இடங்களில், கட்டாயம் சுவாசக் கவசங்களை அணிய வேண்டும் என்று அரசாங்கம் உத்தரவிட்டதைத் தொடர்ந்து, பொது மக்களின் சுமையைக் குறைக்க அவ்வப்போது அவற்றின் விலையை மேலும் குறைப்பதற்கு, உள்நாட்டு வாணிபம் மற்றும் பயனீட்டாளர் விவகாரத் துறை தயாராக இருப்பதாக, அதன் அமைச்சர் டத்தோ அலெக்சண்டர் நந்தா லிங்கி குறிப்பிட்டிருக்கிறார்.

ஒரு சுவாசக் கவசத்தின் மொத்த விலை 95 சென்னாக இருக்கும்.  அவ்வப்போது அதன் உச்சவரம்பு விலையை மேலும் குறைந்த அளவிற்கு குறைக்கவும் அமைச்சு தயாராக உள்ளது. பள்ளித் தவணையைத் தொடங்கியிருக்கும் குழந்தைகளுக்கு சுவாசக் கவசத்தை வாங்கிக் கொடுக்கும் பெற்றோர்கள் மற்றும் பொதுமக்களின் சுமையைக் குறைக்க இம்முயற்சி உதவும் என்றார் அவர்.

மூன்று அடுக்கு சுவாசக் கவசம் ஒன்றின் விலை 80 சென்னிலிருந்து ஒரு ரிங்கிட் 50 சென்னாக உயர்த்துவதற்கான அமைச்சின் அடிப்படைக் காரணங்கள் குறித்து, ஸ்தம்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சொங் சியேங் ஜென் எழுப்பிய கேள்விக்கு நந்தா இவ்வாறு பதிலளித்தார்!

0 Comments

leave a reply

Recent News