loader
பள்ளிகள் இன்று திறக்கப்பட்டன!

பள்ளிகள் இன்று திறக்கப்பட்டன!

புத்ராஜெயா: கோவிட் 19 காரணமாக மூன்று மாதங்களாக மூடப்பட்டிருந்த பள்ளிகள், இன்று, புதன்கிழமை அரசாங்கத் தேர்வுகளை எழுதவிருக்கும் மாணவர்களுக்காக மீண்டும் திறக்கப்பட்டன.

சுகாதார அமைச்சு நிர்ணயித்திருக்கும்  எஸ்.ஓ.பி. வழிகாட்டுதலோடு பள்ளிகள் இன்று முதல் கட்டமாக திறக்கப்பட்டுள்ளன.  இதன் செயல்பாட்டு முறையின் வெற்றியைக் கொண்டே மற்ற வகுப்புகள் கட்டம் கட்டமாகத் திறக்கப்படும் என்றும் ஏதிர்பார்க்கப்படுகிறது.

பள்ளிகள் மீண்டும் திறக்கப்படுவது குறிப்பாக ஐந்தாம் மற்றும் ஆறாம் படிவ மாணவர்களுக்கு, மிகவும் அவசியம் என்பதால், முறையான வழிகாட்டல்களுடன் பள்ளித் தரப்பினர் தீவிர தயார்நிலை பணிகளை மேற்கொண்டனர்.

அதைத் தொடர்ந்து, SPM, SVM, STPM, STAM மற்றும் அதற்கு இணையான அனைத்துலக நிலையிலான தேர்வுகளில் அமரவிருக்கும் மாணவர்களுக்கான கற்றல் கற்பித்தலைத் தொடங்க பள்ளிகள் மீண்டும் இன்று திறக்கப்பட்டிருக்கின்றன.

எனினும், மலேசிய மக்கள் ஒவ்வொருவரும் அரசாங்கம் வழங்கியிருக்கும் தளர்வை எளிதாகக் கருதாமல், நிர்ணயிக்கப்பட்டிருக்கும் விதிமுறைகளைப் பின்பற்றி ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டிருக்கிறது!

0 Comments

leave a reply

Recent News