loader
சினி சட்டமன்ற இடைத்தேர்தல்  சுயேட்சைகளுடன் மோதும் தேசிய முன்னணி!

சினி சட்டமன்ற இடைத்தேர்தல் சுயேட்சைகளுடன் மோதும் தேசிய முன்னணி!

பஹாங் ஜூன் 20-

எதிர்வரும் ஜூலை 4-ஆம் தேதி நடைபெறவிருக்கும் சினி சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிட இன்று மூன்று வேட்பாளர்கள்  வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். 

இந்த சட்டமன்றத்தில் தேசிய முன்னனி போட்டியிடப் போவதாக அறிவித்த நிலையில், இன்று தேசிய முன்னணி வேட்பாளர்  முகமட் ஷாரிம் முகம்மட் ஸாயின்  தனது ஆதரவாளர்களுடன் வேட்பு மனுவைத் தாக்கல் செய்துள்ளார்.

இதனிடையே இரண்டு சுயேட்சை  வேட்பாளர்களும் இன்று வேட்புமனுவைத் தாக்கல் செய்துள்ளனர்.  முகம்மட் ஷுக்ரி முகம்மட் ரம்லி, தெங்கு டத்தோ ஸைனுல் ஹிஷாம் தெங்கு உசேன் ஆகியோர்  வேட்புமனுவைத் தாக்கல் செய்துள்ளனர்.

இதனால் அத்தொகுதியில் மும்முனைப் போட்டி  நிலவியுள்ளது. பாக்காத்தான் ஹாராப்பான் இத்தொகுதியில் போட்டியிடாமல் பின் வாங்கியுள்ள நிலையில், தேசிய முன்னணியை எதிர்த்து இந்தத் தொகுதியில் எந்த ஒரு பெரிய கட்சியும் போட்டியிடவில்லை. 

அதோடு பிரதமர் டான் ஸ்ரீ முகைதீம் யாசின் தலைமையில் உள்ள பெர்சாத்து கட்சி இத்தேர்தலில் போட்டியிட விரும்பவில்லை என்றும், மாறாக தேசிய முன்னணி வேட்பாளரருக்கு ஆதரவு தருவதாகவும் தெரிவித்துள்ளது.

இதனால் தேசிய முன்னணிக்கு  வெற்றி வாய்ப்பு அதிகமாக இருக்கும் நிலையில், மக்கள் யாருக்கு வாக்களிக்கப் போகிறார்கள் என்பது ஜூலை 4 -ஆம் தேதி  நடக்கும் இடைத்தேர்தல் வாக்களிப்பில் தெரிந்துவிடும்.

பத்து நாடாளுமன்றதில் ஒரு மாற்றம் வேண்டும் என்பதற்காக மக்கள் சுயேட்சை வேட்பாளரைத் தேர்ந்தெடுத்து தேசிய முன்னணியைத் தோற்கடித்தார்கள் என்பது வரலாறு. ஆகையால்  சுயேட்சையாக நிற்கும் வேட்பாளர்களையும் நாம் சிறிதாக எண்ணிவிட முடியாது. மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு என்று காத்திருப்போம்!

0 Comments

leave a reply

Recent News