loader
தள்ளிப்போகாதே சும்மா பண்ணிப் பார்த்தேன்! தள்ளிபோனால் ஆட்டம் கண்டிடும் பாஸ்!

தள்ளிப்போகாதே சும்மா பண்ணிப் பார்த்தேன்! தள்ளிபோனால் ஆட்டம் கண்டிடும் பாஸ்!

 

(வெற்றி விக்டர்)

கோலாலம்பூர் ஜூன்- 15

சில தினங்களுக்கு முன் மலேசிய நடிகரும் இயக்குநருமான  பாலகணபதி வில்லியம்  தனது ஃபேஸ் புக் சமூக  வலைத்தளத்தில் 'தள்ளிப் போகாதே' என்ற பாடலைப் பாடி பதிவு செய்தார்.

இது பலத்த எதிர்ப்பைச் சம்பாதித்தது. உண்மையிலேயே அவர் பாடிய பாடல், அந்தப் பாடலின் ரசிகர்களை சினமூட்டும் அளவிற்கு இருந்தது. அதனால் பலர் தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தினர். அதில் சில கொச்சை வார்த்தைகளையும் பயன்படுத்தியிருந்தனர். இன்னும் சிலர் மீம்ஸ் செய்தும் பதிவிட்டனர்.

அந்தக் காணொளி வெளிவந்த பிறகு,  மீண்டும் ஒரு காணொளியை வெளியிட்ட பாலா, நான் அந்த வீடியோவை  ஒரு சமூக ஆய்விற்காகச்  சும்மா பண்ணிப் பார்த்தேன் என்று தெரிவித்தார். சமூக வலைத்தள பகடி  எந்த அளவில் இருக்கிறது என்பது தொடர்பாக ஆய்வு செய்தேன் எனக் கூறியுள்ளார்.

சமூக வலைத்தள  பகடியால்  ஒரு பெண் தற்கொலை செய்துகொண்டபோது வாய்க் கிழிய பேசிய பலர், இன்னும் அந்தப் பகடி வேலையைச் செய்து வருகிறார்கள் என்பது தெரிகிறது என கருத்து தெரிவித்தார்.

ஆனால், அவரைப் பின் தொடரும் ரசிகர்களின் கருத்து எப்படி இருக்கிறது என்றால், ஒரு படைப்பாளியாக உங்களைப் பார்க்கும்  நாங்கள், உங்கள் படம் - பாடல் வெளியீடு ஆகும் போதும் ஆதரவு தெரிவித்தோம். ஒரு பிரபலத்தின் படைப்பு வெளிவந்தால்  அதுவும் சமூக வலைத்தளத்தில் வெளிவந்தால் எல்லா நேரத்திலும் உங்களுக்கு ஆரத்தி எடுக்கமுடியாது.

படைப்பு நன்றாக இருந்தால்,  எங்கள் சொந்த டேட்டாவில் பகிர்ந்தோம். எங்கள் பணம் உங்களுக்காகச் செலவானது. அது ஓகே... அதே படைப்பு சரியாக இல்லை என்றால் சுட்டிக்காட்ட ரசிகர்களுக்கு உரிமையும் உண்டு. அப்படி எங்களுக்கு உரிமை இல்லை என்றால், உங்கள் படைப்பை இனி பார்க்கப்போவதில்லை எனக் கருத்து தெரிவித்துள்ளனர்.

விமர்சனத்திற்கு ஆளாகாத கலைஞர்களே இல்லை. சூப்பர் ஸ்டார் முதல்  முகேன் ராவ் வரை விமர்சனத்திற்கு ஆளாகிதான் பக்குவமடைந்துள்ளனர்.

அது பகடிவதை இல்லை ரசிகர்களின் விமர்சனம். சமூக ஆய்வு என்ற பெயரில் ரசிகர்களின் ரசனையைச் சோதித்தால், அது உங்களின் படைப்பை ரசிக்க நினைக்கும் ரசிகனை, உங்களிடம் இருந்து தள்ளிப்போகச்  சொல்லும். பிறகு நீங்கள் மீண்டும் ரசிகர்களிடத்தில் 'தள்ளிப்போகாதே தள்ளிப்போகச் சொல்லாதே' என கெஞ்சும் நிலைமைக்கு ரசிகர்கள் உங்களிடம் இருந்து தள்ளிப்போய்விடுவார்கள்.
இவ்வாறு கருத்து தெரிவித்து உள்ளனர்.

'குசேலன்' படத்தில் சூப்பார் ஸ்டார் ரஜினிகாந்த் அனுபவித்த ஒரு வசனத்தை கலைஞர்களுக்குப் பதிவு செய்திருப்பார். அதாவது படைப்பு ரசிகனுக்குப் பிடிக்கணும்;  அப்படி பிடிக்கவில்லை என்றால், அது சூப்பர் ஸ்டார் படைப்பாக இருந்தாலும் எடுபடாது என்பதே.

ரசிகர்களின் முன்னிலையில் விபரீத விளையாட்டை முன் எடுப்பதில் கலைஞர்கள் கவனமாக இருக்கவேண்டும். அதே சமயத்தில் விமர்சனங்களும் நாகரிகமாக இருந்தால், கலைப்படைப்பின் வளர்ச்சிக்குச் சிறப்பாக இருக்கும்!

0 Comments

leave a reply

Recent News