loader
கோவிட் 19 கட்டுப்பாடு! உலகின் சிறந்த ஐந்து நாடுகளில் ஒன்றாக மலேசியா!

கோவிட் 19 கட்டுப்பாடு! உலகின் சிறந்த ஐந்து நாடுகளில் ஒன்றாக மலேசியா!

கோலாலம்பூர்: கோவிட் -19 பரவுவதைக் கட்டுப்படுத்துவதில் வெற்றிபெற்ற உலகின் ஐந்து நாடுகளில் ஒன்றாக மலேசியா அங்கீகரிக்கப்பட்டுள்ளது என்று மூத்த அமைச்சர்  டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி தெரிவித்தார்.

பிரதமர் டான் ஸ்ரீ முஹைதீன் யாசின் தலைமையில் மலேசியா, வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்துவதில் மிகச்சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

இதனையடுத்து அரசாங்கத்தின் நடவடிக்கைகள் மக்களால் நன்கு ஏற்றுக்கொள்ளப்பட்ட நாடுகளில், மலேசியாவும் ஒன்றாகியுள்ளது என்று இஸ்மாயில் சப்ரி கூறினார்.

உலகளாவிய கணக்கெடுப்பில் மலேசியா உலகின் முதல் ஐந்து நாடுகளில் இடம் பெற்றுள்ளது  என செய்தியாளர் கூட்டத்தில் அவர் தெரிவித்தார்.

மார்ச் 18 அன்று பிரதமர் இயக்க கட்டுப்பாட்டு ஆணையை (எம்.சி.ஓ) அறிமுகப்படுத்தியபோது இது ஒரு கடினமான மற்றும் சவாலான முடிவு என்று அவர் கூறினார்.  ஆரம்பக் கட்டங்களில் நிச்சயமாக கடினமாக இருந்தது.

இருப்பினும் நம்மவர்கள் பலரின் தியாகத்தால் பரவலை வெற்றிகரமாகக் கட்டுப்படுத்தி, COVID-19 வளைவை தட்டையாக்கியுள்ளோம் என்று அவர் கூறினார்!

 

0 Comments

leave a reply

Recent News