loader
மூக்குத்திக்கு இத்தனை சக்தியா?

மூக்குத்திக்கு இத்தனை சக்தியா?

பெண்கள் மூக்குத்தி அணியும் போது, முன் நெற்றிப் பகுதியில் இருந்து ஆலம் விழுதுகள் போல் சில நரம்புகள் நாசித் துவாரத்தில் இறங்கி கீழே வரும். அந்தப் பகுதியில் துவாரத்தை ஏற்படுத்தி அதில் தங்க மூக்குத்தி அணிந்தால், அந்தத் தங்கம் உடலில் உள்ள வெப்பத்தைக் கிரகித்து தன்னுள்ளே ஈர்த்து வைத்துக் கொள்ளும் சக்தியைப் பெறும். அதுமட்டுமல்ல, மூக்கின் மடல் பகுதியில் ஒரு துவாரம் ஏற்பட்டால் அதன் மூலம் நரம்பு மண்டலத்தில் உள்ள கெட்ட வாயு அகலும்.

மூக்கு குத்துவது, காது குத்துவது துளையிடுவது உடலில் உள்ள வாயுவை (காற்றை) வெளியேற்றுவதற்கு என ஜோதிடத்தில் கூறப்படுகிறது. பாரம்பரிய மற்றும் கலாச்சார அடிப்படையிலும் சிலர் இதனை செய்துகொள்கின்றனர்.

மூக்குத்தி அணிவதற்கு பின்னால் ஒளிந்திருக்கும் விஷயங்கள்

நமது மூளைப் பக்கத்தில் ஹிப்போதெலமஸ் (Hippotelamas) என்ற பகுதி உள்ளது. அதேபோன்று நரம்பு மண்டலங்களைக் கட்டுப்படுத்தக் கூடிய, செயல் படக்கூடிய அளவிற்குச் சில பகுதிகளும் உள்ளன. இதில் உள்ள சில உணர்ச்சிப் பிரவாகங்கள், மூளை செயல்பட துணையாக இருக்கிறது.

மூக்குத்தி அணிவதற்கு பின்னால் ஒளிந்திருக்கும் விஷயங்கள்

இப்படி இந்தப் பகுதியை அதிகமாகச் செயல்படுத்துவதற்கும் மூக்குத்தி காரணமாகிறது. பெண்ணின் மூக்கில் இடது பக்கத்தில் குத்தக் கூடிய மூக்குத்தி வலது பக்க மூளையை நன்றாகச் செயல் படவைக்கும். இடது பக்கத்தில் மூளை அடைப்பு என்றால் வலது பக்கத்தில் நன்கு வேலை செய்யும். வலது பக்கம் அடைத்தால் இடது பக்கம் உள்ள மூளை அதிகமாக இயங்கும்!

 

0 Comments

leave a reply

Recent News