loader
டான் ஸ்ரீ  விக்னேஸ்வரன்  புகழ் பாடுவது என் வேலை இல்லை!   அதேபோல்  பொன்.வேதமூர்த்தி புகழ் பாடுவதும் என் வேலை இல்லை!

டான் ஸ்ரீ விக்னேஸ்வரன் புகழ் பாடுவது என் வேலை இல்லை! அதேபோல் பொன்.வேதமூர்த்தி புகழ் பாடுவதும் என் வேலை இல்லை!

நீங்கள் அனுப்பும் செய்தியை வெளியிட வேண்டுமா? இல்லையா? என்பதை நான்தான் முடிவு செய்வேன்.  நீங்கள் நல்லது செய்தால் தயங்காமல் எழுதுவேன். அதேபோல்  தவறு யார் செய்தாலும் அது எனக்கு ஆதாரத்துடன்  தெரிய வந்தால், அது  யாராக இருந்தாலும் எழுதுவேன். 

டான் ஸ்ரீ  விக்னேஸ்வரன்  புகழ் பாடுவது என் வேலை இல்லை. அதேபோல்  பொன்.வேதமூர்த்தி புகழ் பாடுவதும் என் வேலை இல்லை.

எதற்குச் சொல்றேன்  நா ... 'தமிழ் லென்ஸ்' என் அப்பன் வீட்டு மீடியா. நானே சுயமா வழி நடத்துறேன்....  சில மீடியா மாதிரி சில கட்சிகளின் தயவில் நடத்தல....

நீங்கள் மக்கள் பிரச்னை பற்றி பேசுறீங்களா? சரி நா போடுறேன். உங்களுக்கும்  மலேசிய நண்பன் பத்திரிகைக்கும் பிரச்னையா? அது உங்க தனிப்பட்ட பிரச்னை... வழக்குப் போட்டு பார்த்துக்கோங்க.

அந்தச் செய்தியை போடணுமா வேணாமா என்பதை நான்தான் முடிவு  செய்வேன்.

உங்களுக்கும் நண்பனுக்கும் நடக்கும் கருத்துப் போருக்கு என் ஊடகம் கருவி இல்லை. இது மக்கள் பிரச்னைகளைப் பதிவு செய்ய, மக்களின் வேதனையைச் சம்பந்தப்பட்டவர்களுக்கு உணர்த்த நான் உருவாக்கிய  ஊடகம்.

மக்கள் பிரச்னை தொடர்பான செய்திகள் நிச்சயம் இடம்பெறும். அதை அனுப்புங்கள். அரசியல் பேசுங்கள், கட்சி திட்டம் சொல்லுங்கள் பாரபட்சம்  இல்லாமல் வெளியிடுகிறேன்.

தலைவர் புகழ் பாடும் செய்தியோ அல்லது உங்க கட்டப்பஞ்சாயத்தையோ வெளியிடத் தயாராய் இல்லை.

அதற்கான நாட்டாமை நாங்கள் இல்லை!

அன்புடன்,
வெற்றி விக்டர்.

0 Comments

leave a reply

Recent News