loader
முடிதிருத்தும் நிலையங்கள், சந்தைகள் இயங்க அனுமதி!

முடிதிருத்தும் நிலையங்கள், சந்தைகள் இயங்க அனுமதி!

முடிதிருத்தும் நிலையம் மற்றும் சிகையலங்கார நிலையம் ஜூன் 10-ஆம் தேதி முதல் மீண்டும் திறக்க அனுமதிக்கப்படுவதாக தற்காப்புத்துறை அமைச்சர் இஸ்மாயில் சப்ரிஇன்று அறிவித்தார்.

மேலும், ஜூன் 15 -ஆம் தேதி முதல் இரவுச் சந்தைகள், பசார் மற்றும் திறந்த வெளி சந்தைக் கடைகளும் மீண்டும் திறக்க அனுமதிக்கப்படும் என்று அவர் கூறினார்.

இவ்விவகாரத்தில் சீரான செயலாக்க நடைமுறைகள் (SOP) அமல்படுத்தப்படும் என்று அவர் தெரிவித்தார்.

அமைச்சர் மேலும் கூறுகையில், கோவிட்-19-க்கு அதிக ஆபத்து இருப்பதாகக் கருதப்படும் 60 வயதுக்கு மேற்பட்ட நபர்கள், அவர்கள் தலைமுடியை வெட்டுவதற்கு முன் கடைக்காரரிடம் முன்பதிவு செய்து கொள்வது கட்டாயமாகும் என்றார்.

12 வயதிற்குட்பட்ட குழந்தைகள் முடி வெட்டும் போது, பெற்றோர்கள் உடன் செல்ல அனுமதிக்கப்படுகிறார்கள். ஆனால் அவர்கள் சுவாசக் கவசத்தோடு. ஏப்ரான் ஆடையையும் அணிய வேண்டும்.

முடி திருத்தும் நிலையங்களில் ஒரு வாடிக்கையாளருக்குப் பயன்படுத்திய துண்டுகளை மீண்டும் மற்ற வாடிக்கையாளருக்குப் பயன்படுத்த அனுமதி இல்லை என்று இஸ்மாயில் சப்ரி கூறினார்.
நாற்காலியையும் குறைந்தபட்சம் இரண்டு மீட்டர் தூரத்திற்குப் பிரித்து வைக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

காலை சந்தை காலை 6 மணி முதல் 11 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும் என்றும் இரவுச் சந்தை மாலை 4 மணி முதல் இரவு 10 மணி வரை செயல்படும் என்று அவர் தெரிவித்தார்.
ஒவ்வொரு கடைக்கும் இடையில் 1.5 மீட்டர் முதல் 2 மீட்டர் தூரம் இருக்க வேண்டும்.
உணவு விற்பனையாளர்கள், வாடிக்கையாளர்கள் வீட்டிற்கு எடுத்துச் செல்ல மட்டுமே உணவை விற்க அனுமதிக்கப்படுவார்கள் என்றார்.
அனைத்து விற்பனையாளர்களும் தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்கள் (பிபிஇ), கையுறைகள் மற்றும் முகக்கவசங்களை அணிய வேண்டும்.
அனைத்து விற்பனையாளர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் MySejahtera பயன்பாட்டைப் பயன்படுத்துவது மிக அவசியம் என்றும் இஸ்மாயில் சப்ரி கூறினார்!

0 Comments

leave a reply

Recent News