loader
கொரோனா இந்தியாவில் ஒரே நாளில் 56 பேர் பலி!

கொரோனா இந்தியாவில் ஒரே நாளில் 56 பேர் பலி!

இந்தியாவில் ஒரே நாளில் கொரோனாவுக்கு 56 பேர் பலியாகினர். இந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 25 ஆயிரத்தை நெருங்கியது.

உலகம் முழுவதும் தனது கோர முகத்தை காட்டி வரும் கொரோனா, லட்சக்கணக்கானோரின் உயிரை காவு வாங்கி உள்ளது. வல்லரசு நாடான அமெரிக்காவையே ஆட்டம் காண செய்துவிட்ட இந்த வைரசை கட்டுப்படுத்த இந்தியாவில் நாடு முழுவதும் 40 நாட்கள் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

சரியான நேரத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டதால், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளைப்போல இந்தியாவில் இந்த வைரசால் அதிக பாதிப்பை ஏற்படுத்த முடியவில்லை. ஆனாலும் கொரோனா தன்னால் முடிந்தவரை இந்தியாவில் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. நாடு தழுவிய ஊரடங்கு மட்டுமின்றி, மாநிலங்களும் 144 தடை உத்தரவு உள்பட பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றன. ஆனாலும் கொரோனாவுக்கு முழுமையான கடிவாளம் போட முடியவில்லை. எனவே வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 25 ஆயிரத்தை கடந்துவிட்டது.

மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் நேற்று மாலை வெளியிட்ட புள்ளி விவரத்தில், கொரோனாவால் 24,942 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. வைரசின் கோரப்பிடியில் சிக்கி புதிதாக 56 பேர் உயிரிழந்ததால் பலியானவர்கள் எண்ணிக்கை 779 ஆக அதிகரித்து உள்ளதாகவும், 18,953 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இதுவரை, நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் சுமார் 20.88 சதவீத மக்கள் மீண்டு வந்துள்ளனர் என்றும் அமைச்சகம் தெரிவித்துள்ளது. டாக்டர்கள், நர்சுகளின் அர்ப்பணிப்பு மிகுந்த கவனிப்பு மற்றும் சிகிச்சை முறைகளால் இந்த வைரஸ் தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 5,210 ஆக அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

கொரோனாவால் ஏற்கனவே 7 மாநிலங்களில் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த பட்டியலில் 8-வது மாநிலமாக ஆந்திரா இணைந்துள்ளது.

மராட்டிய மாநிலத்தில் இந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 7 ஆயிரத்தை நோக்கி செல்கிறது. குஜராத்தில் 2,800-க்கும் அதிகமானோரும், டெல்லியில் 2,500-க்கும் மேற்பட்டவர்களும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இந்த எண்ணிக்கை ராஜஸ்தானில் 2,600-ஐ தாண்டிவிட்டது. மத்திய பிரதேசத்தில் 1,840-க்கும் மேற்பட்டவர்களை கொரோனா பாதிப்புக்கு உள்ளாக்கி இருக்கிறது.

6-வது இடத்தில் இருக்கும் தமிழகத்தில் 1,821 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. உத்தரபிரதேசத்தில் 1,700-க்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர்!

0 Comments

leave a reply

Recent News