loader
1 லட்சம் மாணவர்கள் கட்டம் கட்டமாக வீடு திரும்புவார்கள் ! - டான் ஸ்ரீ முகைதீன் யாசின்

1 லட்சம் மாணவர்கள் கட்டம் கட்டமாக வீடு திரும்புவார்கள் ! - டான் ஸ்ரீ முகைதீன் யாசின்

கோலாலம்பூர் ஏப்ரல்-23

கோவிட்-19 நடமாட்ட கட்டுபாட்டு காரணமாக உயர்கல்விக்கூடங்கள்  மூடப்பட்ட நிலையில், இதுநாள்வரை  கல்லூரி விடுதியில் தங்க வைக்கப்பட்ட சுமார் 1 லட்ச மாணவர்களை அவர்களின் வீட்டிற்கு அனுப்பி வைக்க அரசாங்கம் முடிவெடுத்துள்ளதாக பிரதமர் டான் ஸ்ரீ முகைதீன் யாசின்  தெரிவித்தார்.

ஆனால், எல்லாரும் ஒரே நேரத்தில் வீடு திரும்ப மாட்டார்கள் என்றும், அவர்கள் கட்டம் கட்டமாக  அனுப்பிவைக்கப்படுவார்கள் என்றும் கூறினார்.

அதோடு, அரசாங்கத்தின் விதிமுறைகளைப் பின்பற்றி அவர்கள் சுகாதார ரீதியில் நலமாக இருப்பது உறுதி செய்யப்பட்ட பிறகு, வீட்டிற்கு அனுப்பி வைக்கப்படுவர் என பிரதமர் தெரிவித்தார்.

இதற்கான வழிமுறை மற்றும்  நடவடிக்கைகளை உரிய அமைச்சு பின்னர் அறிவிக்கும் எனக் கூறிய பிரதமர், பெற்றோர்கள் சற்று பொறுமை காக்கவேண்டும் என கேட்டுக்கொண்டார்.

இந்த நடமாட்டக் கட்டுப்பாடு காலகட்டத்தில் தங்களது சொந்த கிராமத்தில் அல்லது மற்ற இடத்தில் சிக்கி கொண்ட மக்கள் அதிகமாக உள்ளனர். அவர்கள் தங்கள்  சொந்த இல்லத்திற்குத் திரும்ப அரசாங்கம் ஒரு வாய்ப்பை  வழங்கியுள்ளது என்றும், அதுவும் சில விதிமுறைகளுக்கு உட்பட்டதுதான் என்றும் பிரதமர் கூறினார்.

அத்தகையவர்கள் அரச மலேசிய போலீஸ் படை உருவாக்கியுள்ள செயலி வாயிலாகப் பதிவு செய்வதோடு, தங்களின் சுகாதார நிலையை உறுதி  செய்யவேண்டும். அதோடு ஒரு வழி  பயண அனுமதி மட்டும்தான் வழங்கப்படும் என பிரதமர் இன்று தனது நேரலை உரையில தெரிவித்தார்!

0 Comments

leave a reply

Recent News