loader
பத்து மலை ஸ்ரீ முனீஸ்வரர் ஆலயத்தின் சார்பில் கோவிட் நிவாரண நிதி!

பத்து மலை ஸ்ரீ முனீஸ்வரர் ஆலயத்தின் சார்பில் கோவிட் நிவாரண நிதி!

(ஆர்.பார்த்திபன்)

கோலாலம்பூர், ஏப் 21-

பத்து மலை அருள்மிகு ஸ்ரீ முனீஸ்வரர் ஆலயம் மற்றும் சில நல்ல உள்ளங்களின் ஏற்பாட்டில், கோவிட்-19 நிவாரண நிதியாக 100 வசதி குறைந்த குடும்பங்களுக்கு 90 வெள்ளிக்கான சமையல் பொருட்கள் வழங்கப்பட்டு வருவதாக அருள்மிகு ஸ்ரீ முனீஸ்வரர் ஆலயத்

தலைவர் கந்தசாமி மாரிமுத்து தெரிவித்தார்.

நடமாட்டக் கட்டுப்பாட்டினை அரசாங்கம் அறிவித்ததில் இருந்து பல வசதி குறைந்த குடும்பங்கள், வேலை இல்லாமல் வீட்டுக்குத் தேவையான பொருட்களை வாங்க முடியாமல் தவித்து வருகின்றனர்.  அப்படிப்பட்டவர்களுக்கு இந்த உதவி வழங்கப்பட்டு வருகிறது.

மேலும் 32 குடும்பங்களுக்கு இந்த உதவி ஏற்கனவே வழங்கப்பட்டுவிட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

அரசாங்கம் கேட்டுக்கொண்டபடி அனைவரும் வீட்டிலேயே தங்கள் குடும்பத்துடன் ஆரோக்கியமாக இருக்கும்படி ஆலயத் தலைவர் கந்தசாமி மாரிமுத்து கேட்டுக்கொண்டார்!

0 Comments

leave a reply

Recent News