loader
சிக்கலில் டாக்சி ஓட்டுனர்கள்!   அரசாங்கம் என்ன செய்யப்போகிறது?

சிக்கலில் டாக்சி ஓட்டுனர்கள்! அரசாங்கம் என்ன செய்யப்போகிறது?

 

கோலாலம்பூர், ஏப் 18- 

மலேசியா முழுவதும்  5,000 முதல் 6,000 பேர் வரை வாடகை கார் ஓட்டுனர்கள் இருக்கின்றனர். இந்நிலையில் கோவிட்-19 நடமாட்ட கட்டுப்பாட்டு ஆணையால் பெரிதும் பாதிப்புக்குள்ளாகியுள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

பெரும்பாலும் சுற்றுப்பயணிகளை நம்பியும், வர்த்தகர்களை நம்பியும் பிழப்பை நடத்தி வந்த தாங்கள் பெரும் சிக்கலில் உள்ளாதாகவும்,  அரசாங்கம் இதற்கு ஒரு தீர்வு காணவேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

நாள் ஒன்றுக்கு 30 வெள்ளியில் இருந்து 100 வெள்ளி வரை வாடகை கொடுத்து வர வேண்டும். தற்போது டாக்சி நிறுவனங்களில் சில, நடமாட்டக் காட்டுபாடு காலங்களில் செலுத்த முடியாமல் போனால் பரவயில்லை ஆனால்,  அதற்குப் பிறகு கொஞ்சம் கொஞ்சமாகக் கட்ட வேண்டும் என்று கூறுகின்றன. 

வாடகை கட்டுவதற்கு வருமானம் இல்லை என்கிற நிலையில், எப்படி விடுப்பட்ட அந்தக் கட்டணத்தைச் செலுத்துவத?  என்று ஒரு டாக்சியோட்டியான தோமஸ் ராமசந்திரன் தெரிவித்தார்.

இதற்குத் தீர்வாக அரசு சம்பந்தப்பட்ட நிறுவனங்களிடம் பேச வேண்டும் என்றும், இந்த நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை முடிவுக்கு வந்த பிறகும் நிச்சயம் எங்கள் வருமானம் ஒரு வருட காலத்திற்கு பாதிப்பில்தான் இருக்கும் என்று பயப்படுவதாக டாக்சி ஓட்டுநர்களான  கே.கே.சுந்தரம், லெட்சுமணன், சாமி ஆகியோர் கூறுகின்றனர்.

எனவே அரசாங்கம் இதற்கு தீர்வாக எங்களின் கட்டணத்திலிருந்து பெர்மிட் தொகையை கழித்து, வாடகை கார் டாக்சி கட்டணங்களைச் செலுத்த தவணையைத் தள்ளிவைத்தால் வாடகை கார் டாக்சி ஓட்டுநர்களுக்கு அது உதவியாக இருக்கும் என்று அவர்கள் தெரிவித்தனர்.

அரசாங்கத்திடம் நாங்கள் நிதி உதவி கேட்கவில்லை. எங்கள் பிரச்சனைகளுக்கு தீர்வுதா கேட்கிறோம். எங்கள் சுமைகளுக்கு ஒரு தீர்வு காண அரசாங்கம் இக்கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினர்!

0 Comments

leave a reply

Recent News