loader
வீட்டிலிருந்தபடியே மீன்களைப் பெறலாம்! மீன்வள மேம்பாட்டு வாரியம் ஏற்பாடு!

வீட்டிலிருந்தபடியே மீன்களைப் பெறலாம்! மீன்வள மேம்பாட்டு வாரியம் ஏற்பாடு!

கோலாலம்பூர் : நடமாட்டக் கட்டுப்பாட்டு காலத்தில் பொதுமக்களுக்கு மீன் வழங்குவதை எளிதாக்குவதற்காக, மலேசிய மீன்வள மேம்பாட்டு வாரியம் (எல்.கே.ஐ.எம்) வீடு வீடாக மீன்கள் விற்பனை செய்வதை அறிமுகப்படுத்தியுள்ளது. 

தேசிய மீனவர் சங்கத்தின் கீழ் நாடு முழுவதும் 44 மீனவர் சங்கங்களுடன் ஒத்துழைத்ததன் விளைவாக இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஆர்வமுள்ள பொதுமக்கள் www.nekmatbiz.com.my மூலம் ஆன்லைனில் மீன்களுக்கான ஆர்டர்களைக் கொடுக்கலாம்.

இம்முயற்சி சந்தைகளில் நெரிசலைக் குறைப்பதோடு, கோவிட் -19 பரவுவதைத் தடுக்கும்.

ஷாப்பி அப்ளிகேஷன் மூலம் எல்.கே.ஐ.எம் ஆன்லைனில் மீன்களையும் விற்பனை செய்யும் என்றும், நுகர்வோர் இனி தங்கள் விநியோகத்தைப் பெற சந்தைக்குச் செல்லத் தேவையில்லை என்றும்  எல்.கே.ஐ.எம் இயக்குநர் ராஜா காலித் கூறினார்.

போதுமான அளவு மீன்கள் 185,000 மெட்ரிக் டன் கையிருப்புடன் சந்தையில் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது!

 

0 Comments

leave a reply

Recent News