loader
இந்தியாவிலிருந்து மலேசியாவிற்கு மருந்து!

இந்தியாவிலிருந்து மலேசியாவிற்கு மருந்து!

புதுடெல்லி / கோலாலம்பூர் : கோவிட் -19 நோயாளிகளுக்குச் சிகிச்சையளிக்க மலேசியாவிற்கு ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மாத்திரைகளை வழங்க இந்தியா ஒப்புக் கொண்டுள்ளது.

உலகின் மிகப் பெரிய ஹைட்ராக்ஸி குளோரோகுயின் உற்பத்தியாளராக இந்தியா உள்ளது, இதன் விற்பனை அமெரிக்கா உட்பட உலகெங்கிலும் அதிகரித்துள்ளது. குறிப்பாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கோவிட் -19 க்கு எதிரான சாத்தியமான ஆயுதம் அந்த மருந்து என்று கூறிய பின்னர் இது கவனம் பெற்றுள்ளது.

இதனையடுத்து அண்டை நாடுகளுக்கும், தொற்றுநோயால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள நாடுகளுக்கும் அதை வழங்க இந்தியா ஒப்புக் கொண்டது.

ஏப்ரல் 14 ஆம் தேதி, மலேசியாவிற்கு 89,100 மாத்திரைகளை இறக்குமதி செய்ய இந்தியா அனுமதி அளித்துள்ளது என்று வெளியுறவு அமைச்சர் கமாருடின் தெரிவித்தார்.

மலேசியாவின் சுகாதார அமைச்சகம் இது நோயின் வளர்ச்சியையும் நுரையீரல் அழற்சியையும் குறைக்க முடியும் என்று கூறியுள்ளது. 

மலேசியா இந்தியாவுக்கு ஒரு மில்லியனுக்கும் அதிகமான ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மாத்திரைகள் கேட்டிருந்தது.

தென்கிழக்கு ஆசியாவில் மலேசியா கோவிட் -19 நோய்த்தொற்றுகளில் மூன்றாவது இடத்தில் உள்ளது. 5,000 க்கும் மேற்பட்ட நோயாளிகள் உள்ளனர், அவர்களில் 83 பேர் இறந்துள்ளனர்!


 

0 Comments

leave a reply

Recent News