loader
நேபாளத்தில் சிக்கிய 43 மலேசியர்களை மீட்டுக் கொண்டு வந்தது மலேசியா!

நேபாளத்தில் சிக்கிய 43 மலேசியர்களை மீட்டுக் கொண்டு வந்தது மலேசியா!

 

கோலாலம்பூர் : கோவிட் -19 பரவுவதைக் கட்டுப்படுத்த விதிக்கப்பட்ட பயணக் கட்டுப்பாடுகள் காரணமாக நேபாளத்தில் சிக்கித் தவித்த 43 மலேசியர்கள் ஏப்ரல் 4 ஆம் தேதி பாதுகாப்பாக வீடு திரும்பியதாக நேபாள மலேசிய தூதரகம் தெரிவித்துள்ளது.

அவர்கள் அனைவரையும் மலிண்டோ ஏர் விமானம் மூலம் அழைத்து வந்ததாக தூதரகத்தின் மூன்றாவது செயலாளர் அல்போனி பசீர் தெரிவித்தார்.

"இன்றுவரை, ஒரு சில எண்ணிக்கையிலான மலேசியர்கள் தங்கள் சொந்த விருப்பத்தின் பேரில் இன்னும் நேபாளத்தில் உள்ளனர். இந்த எண்ணிக்கையிலான மலேசியர்கள் சிக்கித் தவிப்பதாகக் கருதப்படுவதில்லை" என்று அவர் புதன்கிழமை (ஏப்ரல் 15) பெர்னாமாவுக்கு அளித்த பதில் அறிக்கையில் தெரிவித்தார்.

சர்வதேச ஊடக அறிக்கையின்படி, நேபாள அரசு தனது நாடு தழுவிய ஊரடங்கை ஏப்ரல் 27 வரை நீட்டிக்க முடிவு செய்துள்ளது.

அனைத்து வர்த்தக சர்வதேச விமானங்களையும் ஏப்ரல் 30 வரை நிறுத்தவும் நேபாளம் முடிவு செய்திருக்கிறது!

0 Comments

leave a reply

Recent News