loader
புத்தாண்டாக இருந்தாலும் ஆலயங்களைப் பொதுமக்களுக்காகத் திறக்கக்கூடாது!  டத்தோ ஆர்.எஸ்.மோகன் ஷான்

புத்தாண்டாக இருந்தாலும் ஆலயங்களைப் பொதுமக்களுக்காகத் திறக்கக்கூடாது! டத்தோ ஆர்.எஸ்.மோகன் ஷான்

நாளை 14.04.2020ஆம் தேதி கொண்டாடவிருக்கும் சார்வரி தமிழ்ப் புத்தாண்டை ஒட்டி அன்றைய தினத்தில் ஆலயங்கள் பொதுமக்களுக்கு திறக்கக்கூடாது என மலேசிய இந்து சங்கம் கேட்டுக்கொண்டுள்ளது.

வருடந்தோறும் புத்தாண்டை ஒட்டி இந்துக்கள் ஆலயங்களுக்குச் சென்று இறைவனை வணங்குவதும், மருந்து நீர் பெறுவதும் வழக்கம். ஆனால், இவ்வருடம் கோவிட்-19 நோய் தொற்று காரணமாக நடமாட்ட கட்டுப்பாட்டு உத்தரவு அமலில் இருப்பதால் ஆலயங்களில் பொதுமக்களுக்கு அனுமதி கிடையாது.

ஆனால், ஆலயங்களில் சார்வரி தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு, உலக நலன் வேண்டியும் நோய் தொற்றிலிருந்து நாடு விடுபடவும் காலை 8 மணி முதல் 9.30 மணி வரை சிறப்பு பூஜைகள் நடத்த வேண்டும். இதனைக் குருக்கள் மட்டுமே செய்ய வேண்டும். பக்தர்களுக்கு அனுமதி கிடையாது.

உத்தரவை மீறி ஆலயங்கள் பொதுமக்களுக்குத் திறக்கப்பட்டால் ஆலய நிர்வாகத்தினர் மீது அரசாங்கம் சட்ட நடவடிக்கை எடுக்க வாய்ப்பு உண்டு என்பதை நினைவில் கொள்ள வேண்டும். கோவிட்-19 தொற்றை முறியடிக்க நாம் அனைவரும் இணைந்து ஒத்துழைக்க வேண்டியது அவசியம் என மலேசிய இந்து சங்கத்தின் தலைவர் டத்தோ ஆர்.எஸ்.மோகம் ஷான் ஓர் அறிக்கை வழி தெரிவித்துள்ளார்!

 

0 Comments

leave a reply

Recent News