loader
கொரோனா; சீனாவில் உண்மையான இறப்பு எண்ணிக்கை 40 ஆயிரத்துக்கும் மேல்! WHO மீது அமெரிக்கா கோபம்!

கொரோனா; சீனாவில் உண்மையான இறப்பு எண்ணிக்கை 40 ஆயிரத்துக்கும் மேல்! WHO மீது அமெரிக்கா கோபம்!

அமெரிக்காவில் தற்போதைய நிலவரப்படி, கொரோனா  வைரசால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 12,837 ஆக உள்ளது. நேற்று ஒரு நாளில் மட்டும் ஏறத்தாழ 2 ஆயிரம் பேர் கொரோனா பாதிப்பால் அமெரிக்காவில் பலியாகியுள்ளனர். அதேபோல், பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 4 லட்சத்தை தாண்டியுள்ளது. 

இந்த நிலையில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், உலக சுகாதார நிறுவனத்திற்கு அளிக்கப்படும் நிதி இடைநிறுத்தக்கூடும் என்று அச்சுறுத்தியுள்ளார்.

கொரோனா வைரஸ் தாக்கம் குறித்து தினந்தோறும் பேசி வரும் டிரம்ப், இன்று வெள்ளை மாளிகையில், உலக சுகாதார அமைப்பின் மீது இருக்கும் கோபத்தை மீண்டும் வெளிப்படுத்தினார்.

கொரோனா வைரஸ் தொற்று நோய்க்கு பதிலளிப்பதில் ஒரு பயனும் இல்லை என்று கோபமாகக் கூறினார். மேலும், அவர் உலகசுகாதார அமைப்பு அமெரிக்காவிடமிருந்து ஏராளமான பணத்தைப் பெறுகிறது. அவர்களுக்கான பணத்தின் பெரும்பகுதியை அமெரிக்கா செலுத்துகிறது. ஆனால் அந்த அமைப்பு
சீனாவை மையமாக கொண்டதோ என்று நினைக்கத் தோன்றுகிறது என்று குற்றம் சாட்டினார்.

கொரோனா வைரஸ் பற்றி அவர்கள் அறிந்திருக்க வேண்டும், நிறைய தகவல்கள் அவர்களிடம் இருந்தன. அறிந்திருக்கலாம், ஆனால் இதன் காரணமாக, இனி உலக சுகாதர அமைப்பிற்கு செலவழித்த பணத்தை நாங்கள் பிடிக்கப் போகிறோம் என்று கூறியுள்ளார். இதனால் உலக சுகாதார அமைப்பிற்கு மிகப் பெரிய நன்கொடையாளரின் பங்களிப்பு நிறுத்தக் கூடும் என்று கூறப்படுகிறது.

சீனா தங்கள் நாட்டில் கொரோனா வைரஸால் இறந்தவர்களின் எண்ணிக்கை 3,300 என்று கூறுகிறது. ஆனால் அமெரிக்க உளவுத்துறை வட்டாரங்கள் சீனாவில், உண்மையான இறப்பு எண்ணிக்கை 40,000 க்கும் அதிகம் என்று கூறுகிறது.

கடந்த ஜனவரி மாதம், உலக சுகாதார அமைப்பின் நிர்வாக இயக்குனர் டாக்டர் மைக்கேல் ரியான், கொரோனா வைரஸைப் பற்றி சீனா சரியானதைச் செய்கிறது என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது!

0 Comments

leave a reply

Recent News