loader
அசிங்கமான அரசியல் வேண்டாம்!  எங்களை சங்கடத்தில் ஆழ்த்தாதீர்கள்! - காமாட்சி

அசிங்கமான அரசியல் வேண்டாம்! எங்களை சங்கடத்தில் ஆழ்த்தாதீர்கள்! - காமாட்சி

சபாய் ஏப்ரல் -8

பஹாங் மாநில மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ ஹாஜி வான் ரொஸ்டி வான் இஸ்மாயில் பஹாங் மாநிலத்தில் உள்ள 42 சட்டமன்ற உறுப்பினர்களுக்கு கோவிட் 19  பாதிப்பால் அவதிப்படும் மக்களுக்கு உதவி செய்வதற்காக, ஒரு தொகுதிக்கு 75 ஆயிரம் வெள்ளி மானியம் வழங்கியாதாக நேற்று வெளிவந்த தகவலில் உண்மை எதுவும் இல்லை என சபாய் சட்டமன்ற உறுப்பினரான காமாட்சி தெரிவித்தார்.

நேற்றைய நிகழ்ச்சி தொடர்பாக எங்களுக்கு எதுவும் தெரிவிக்கப்படவில்லை. ஜ.செ.க கட்சியை சேர்ந்த 7 சட்டமன்ற உறுப்பினர்களுக்கும், 2 பி.கே.ஆர் சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் அழைப்பும் வரவில்லை மானியமும்  வரவில்லை. ஆனால், செய்தி மட்டும் வருகிறது.

இப்படிப்பட்ட இக்கட்டான சூழ்நிலையில் அசிங்கமான அரசியல் வேண்டாம். நேற்றைய தகவலினால் பொதுமக்களில் பலர் எங்களைத் தொடர்புகொண்டு,  மாநில அரசு மானியம் வழங்கிவிட்டதாமே எப்போது எங்களுக்கு உதவி கிடைக்கும் எனக் கேட்கிறார்கள். அவர்களிடம் எங்களுக்கு எந்த மானியமும் வரவில்லை என விளக்கவேண்டிய சூழல் உருவானது. இன்னும் சிலர் பணத்தை நாங்கள் பதுக்கியது போல் சில கருத்துக்களை வெளியிடுகின்றனர். ஒன்று ஒருங்கிணைந்து வேலை செய்ய மானியம் தாருங்கள். இல்லை  எங்கள் மூலமாக உதவிகள் போவதை விரும்பவில்லை என்றால், எங்கள் தொகுதி மக்களுக்கு மாநில அரசே நேரடியாகத் தாருங்கள். ஆனால், மக்களைக் குழப்பி அலையவிடாதீர்கள். அவர்களை சங்கடப்படுத்தாதீர்கள் என சபாய் சட்டமன்ற உறுப்பினர் காமாட்சி, தமிழ் லென்ஸிடம் தெரிவித்தார்!

1 Comments

  • குமரவேலு இராமசாமி
    2020-04-08 00:35:16

    பொதுமக்களை குழப்பும் செய்திகளை பரவவிடாதீர்கள். மாண்புமிகு சொன்னது உண்மை

leave a reply

Recent News