loader
சரவணன் Vs ஓம்ஸ் தியாகராஜன்! - தமிழ் லென்ஸ் செய்திக்கு ஓம்ஸ் தியாகராஜன் பதில்!

சரவணன் Vs ஓம்ஸ் தியாகராஜன்! - தமிழ் லென்ஸ் செய்திக்கு ஓம்ஸ் தியாகராஜன் பதில்!

தமிழகத்திலும் நமது நாட்டு அரசியலா? என்கிற ரீதியில் சரவணன் Vs ஓம்ஸ் தியாகராஜன் என்ற தலைப்பில் நமது தமிழ் லென்ஸில் செய்தி வெளியிட்டிருந்தோம். அதற்கு பதிலளிக்கும் விதமாக ஓம்ஸ் தியாகராஜன் தமிழ் மலர் நாளிதழில் விளக்கமளித்துள்ளார்.

அதில்,

ஏப்ரல் 4-ஆம் தேதி திருச்சி விமான நிலையத்திற்கு வருகை புரிந்த யு.எஸ். சுப்ராவும் அவரது துணைவியாரும் விமானத்தில் ஏறுவதற்கு வழக்கம் போல் இம்முறையும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

திருச்சி விமான நிலையத்திலிருந்து காலை 10.25க்கு புறப்படவிருந்த மலிண்டோ விமானத்தில் மலேசியாவுக்கு 152 பயணிகள் திருப்புவதாக இருந்தது.
அந்த விமானத்தில் ஏறுவதற்கு யு.எஸ்.சுப்ராவுக்கும் அவரது துணைவியாருக்கும் தடை போடப்பட்டதைத் புரிந்து கொண்ட 3 மலேசியர்கள் அந்தத் தம்பதியருக்கு ஆதரவாக குரல் எழுப்பியுள்ளனர்.

யு.எஸ்.சுப்ராவுக்காக குரல் கொடுத்த காரணத்திற்காக அந்த மூவரும் விமானத்திற்குள் ஏறுவதற்குத் தடை விதித்துள்ளனர், இந்தப் பயணத்திற்கான ஒருங்கிணைப்பாளர்கள்.
இதைத் தொடர்ந்து அங்கே ஒரு கும்பல் நுழைந்து தங்களை அரசு சாரா இயக்கத்தினர் என அறிமுகப்படுத்திக் கொண்டு யு.எஸ். சுப்ரா மற்றும் அவரது மனைவியிடம் உருட்டல் மிரட்டலை செய்து குண்டர் கும்பலைப் போல் நடந்து கொண்டனர்.

நிலைமை மோசமடைந்துள்ளதை உணர்ந்த யு.எஸ்.சுப்ராவின் துணைவியார், வேறு வழியின்றி கூச்சலிட்டு ஆர்ப்பாட்டம் செய்துள்ளார்.

திருச்சி விமான நிலையத்தில் பெண் ஒருவர் கூச்சலிடுவதை அறிந்த தமிழ் நாடு காவல் துறையைச் சேர்ந்த இன்ஸ்பெக்டர் பெரியசாமி, சம்பந்தப்பட்ட இடத்திற்குச் சென்றுள்ளார்.
காவல் துறை வருவதை உணர்ந்த, குண்டர்களைப் போல் நடந்து கொண்ட அந்தக் கும்பல் உடனடியாக விலகிச் சென்று மாயமாகியுள்ளது.

இதற்கிடையில் யு.எஸ். சுப்ரா தம்பதியருக்காக குரல் கொடுத்த அந்த மூன்று மலேசியர்கள் விமானத்திற்குள் ஏற அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

யு.எஸ்.சுப்ரா, அவரது மனைவி ஆகிய இருவரிடம் என்ன நடந்தது? என்று முழுமையாக விசாரித்த இன்ஸ்பெக்டர் பெரியசாமி, நிலவரத்தை முழுமையாக அறிந்து, புரிந்து தெரிந்துகொண்டிருக்கிறார்.
சம்பந்தப்பட்டவர்களின் கடப்பிதழ்களை வாங்கிக்கொண்டு நேரடியாக மலேசியத் தூதரகத்தோடு தொடர்பு கொண்டிருக்கிறார்.

அதன் பிறகு மலிண்டோ பயணிகளை அனுப்பும் முகப்புக்குச் சென்று விசாரித்ததில், சம்பந்தப்பட்ட விமானத்தில் அதிகமான பயணிகள் அமருவதற்கான இருக்கைகள் காலியாக இருப்பதைத் தெரிந்து கொண்டிருக்கிறார்.

அந்த தமிழ்நாடு காவல் துறை இன்ஸ்பெக்டர் பெரியசாமி சற்றும் தாமதிக்காமல் தாமாகவே யு.எஸ்.சுப்ராவுக்கும் அவரது மனைவிக்கும் போர்டிங் பாஸ் பெற்று அவர்களைக் கையோடு அழைத்துச் சென்று, அனைத்து பரிசோதனைகளையும் கடந்து விமானத்தில் அமருவதற்கான ஆயத்தங்களைச் செய்திருக்கிறார்.

அவர்கள் பயணித்த அந்த மலிண்டோ விமானத்தில் 180 பேர் அமருவதற்கான இருக்கைகள் இருந்தும், வெறும் 152 பேர் மட்டுமே பயணித்து நாடு திரும்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.

அவர்கள் பாதுகாப்பாக நாடு திரும்பினர். யு.எஸ்.சுப்ரா மற்றும் அவரது
துணைவியார் நாடு திரும்ப மிகவும் துரிதமாக பணியாற்றிய இன்ஸ்பெக்டர் பெரியசாமிக்கும் தமிழ் நாடு காவல் துறைக்கும் நன்றியைப் பதிவு செய்து கொள்கிறோம்.

இதுதான் அந்த விமான நிலையத்தில் நேற்று முன்தினம் காலை 10.25 மணிக்கு மலிண்டோ விமானம் திருச்சியிலிருந்து மலேசியா புறப்படுவதற்கு முன்னதாக நிகழ்ந்த சம்பவமாகும்.

இச்சம்பவம் குறித்து தமிழ் நாடு தமிழ்ப் பத்திரிகைகளிலும் மலேசிய பெரித்தா ஹாரியான் இணைய தள ஏட்டிலும் செய்தி வெளியிடப்பட்டிருக்கிறது.
அதையும் இங்கே இணைத்து பிரசுரித்திருக்கிறோம். ஆகவே இது தான் உண்மை என்று குறிப்பிட்டுள்ளார்!

0 Comments

leave a reply

Recent News