loader
ஆலயத் திருப்பணிக்காக மக்கள் கொடுத்த பணத்தை...  அவசரக் காலத்தில் மக்களுக்கே வழங்கிய லஞ்சாங் தோட்டம் ஸ்ரீ மகா  மாரியம்மன் ஆலயம்!

ஆலயத் திருப்பணிக்காக மக்கள் கொடுத்த பணத்தை... அவசரக் காலத்தில் மக்களுக்கே வழங்கிய லஞ்சாங் தோட்டம் ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயம்!

பகாங், லஞ்சாங் தோட்டம் பிரிவு 1 மற்றும் பிரிவு 2 ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயம் சார்பில், லஞ்சாங் பட்டிணத்தில் வாழும் 70 இந்தியக் குடும்பங்களுக்கு, அவர்களின் நிதிச்சுமையைக் குறைக்கும் பொருட்டு  ஒரு குடும்பத்திற்கு 200 வெள்ளி வீதம் மொத்தம் 14,000 வெள்ளி நேற்று வழங்கப்பட்டது.

ஆலயத் திருப்பணிக்காக ஏற்கெனவே மக்கள் வழங்கிய நிதியிலிருந்து இந்நிதி வழங்கப்பட்டுள்ளது. ஆலயத் திருப்பணிகளை விடவும் மக்கள் நலனே மிக முக்கியம் என்ற எண்ணத்தில், இவ்வுதவி வழங்கப்பட்டுள்ளது.

 

மக்கள் சாமிக்காகக் கொடுத்தனர். இப்போது அந்தப் பணம் மக்களுக்கே பயனாக இருக்கிறது.

 

ஆலய சேமிப்பு நிதியில் இருந்து, கோவிட்19 கிருமி பரவிக்கொண்டு இருக்கும் இத்தருணத்தில், லஞ்சாங் வட்டாரத்தில் வாழும் மக்களுக்கு உதவுவதை ஆலய நிர்வாகம் கடமையாக எண்ணுகிறது.  

 

ஏப்ரல் 14-வரை அரசாங்கம் அனைவரையும் வீட்டிலேயே இருக்குமாறு சொல்லியிருப்பதால், பல குடும்பங்களுக்கு வருமானத் தடை ஏற்பட்டுள்ளது. 

 

எனவே, இதனைக் கருத்தில்கொண்டு ஆலய நிர்வாகம் மக்களின் வாழ்வாதாரத்திற்கு முன்னுரிமை அளித்து இச்சேவையை வழங்கியதாக நிர்வாகக் குழுவினர் தெரிவித்தனர்.

 

இதேபோல் அனைத்து ஆலயங்களும் மக்களுக்கு உதவ முன்வரலாம், இதுபோன்ற பேரிடர் காலங்களில்!

0 Comments

leave a reply

Recent News