loader
இதுதான் 100 வெள்ளிக்கான பொருளா? உதவியை முழுமையாக மக்களுக்குக் கொடுங்கள்!  - நஜீப் வேண்டுகோள்

இதுதான் 100 வெள்ளிக்கான பொருளா? உதவியை முழுமையாக மக்களுக்குக் கொடுங்கள்! - நஜீப் வேண்டுகோள்

கோலாலம்பூர்  மார்ச்-30

சபா மக்களுக்கு 100 வெள்ளி மதிப்பிலான அன்றாட அத்தியாவசியப் பொருள் உதவிகளை வழங்குமாறு மாநில அரசு  தெரிவித்திருந்தது.

இந்நிலையில், தனக்கு சில மக்கள் தங்களுக்குக் கிடைக்கப்பெற்ற உதவிப் பொருட்களை அனுப்பி இதுவா 100 வெள்ளி மதிப்பிலான பொருட்கள் என வருந்தியதாக முன்னாள் பிரதமர் டத்தோ ஸ்ரீ நஜீப் துன் ரசாக்  தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார்.

அரசியலை ஒதுக்கி வைப்போம்.
மனசாட்சியுடன் சொல்லுங்கள் இதன் மதிப்பு 100 வெள்ளியா? என டத்தோ ஸ்ரீ நஜீப் கேள்வி  எழுப்பினார்.

வசதி இல்லாத மக்களுக்கு இப்போது உதவி  தேவைப்படுகிறது அதில் விளையாடதீர்கள். இந்தத் தருணம் நாம் அவர்களுக்கு உதவியாக இருக்கவேண்டும்.  ஆனால், அதில் இருந்து ஆதாயம் தேடக்கூடாது என டத்தோ ஸ்ரீ நஜீப் தெரிவித்தார்.

அதுமட்டும்மின்றி மாநில அரசாங்கம் இந்தத் தருணத்தில் சிக்கனப்போக்கைக் கடைப்பிடிக்ககூடாது எனவும் அவர் தெரிவித்தார்.

மாநில அரசாங்கம் மற்றும் மத்திய அரசாங்கம் வசதி குறைவான மக்களுக்கு உதவிகளை அதிகம் செய்யவேண்டும் என டத்தோ ஸ்ரீ நஜீப் கேட்டுக்கொண்டார்!

0 Comments

leave a reply

Recent News