loader
அச்சத்தில் அமெரிக்கா!  ஒரே நாளில் 18 ஆயிரம் பாதிப்புகள்!  1 லட்சத்திற்கும் மேல் கோவிட் நோயாளிகள்!

அச்சத்தில் அமெரிக்கா! ஒரே நாளில் 18 ஆயிரம் பாதிப்புகள்! 1 லட்சத்திற்கும் மேல் கோவிட் நோயாளிகள்!

 

 

அதிக கொரோனா பாதிப்புகள்... சீனாவை முந்தி முதலிடத்திற்கு வந்த அமெரிக்கா...!

கொரோனா வைரஸால் அதிகம் பேர் பாதிக்கப்பட்டவர்கள் நாடாக சீனா இருந்த நிலையில், அமெரிக்கா தற்போது முதலிடத்திற்கு வந்துள்ளது.

சீனாவின் ஊஹான் மாகாணத்தில் கடந்தாண்டு டிசம்பர் மாதம் விலங்குகளிடம் இருந்து வைரஸ் ஒன்று மனிதர்களுக்கு பரவியது. கொரோனா வைரஸ் குடும்பத்தைச் சார்ந்த அந்த வைரஸுக்கு கோவிட் 19 என்று பெயரிடப்பட்டது.

சீனாவில் அதிவேகமாக இந்த வைரஸ் பரவிய நிலையில், உலகம் எச்சரிக்கை ஆனது. எனினும், இந்த வைரஸுக்கு தடுப்பு மருந்துகள் எதுவும் இல்லாததால் உயிரிழப்பை தடுக்க முடியவில்லை. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களை தனிமைப்படுத்தும் பணி சிக்கலானது என்பதால், வைரஸ் சீனாவைத்தாண்டி வெளிநாடுகளுக்கும் பரவத்தொடங்கியது.

தற்போது வரை உலகம் முழுவதும் 190-க்கும் மேற்பட்ட நாடுகளில் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. சுமார் 5 லட்சத்து 31 ஆயிரம் பேர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். சுமார் 24 ஆயிரம் பேர் இறந்துள்ளனர்.

1 லட்சத்து 24 ஆயிரம் பேர் குணமாகியுள்ளனர். சீனாவை விட இத்தாலியில் கொரோனாவால் அதிக உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. கொரோனாவை சீனா கிட்டத்தட்ட கட்டுப்படுத்திய நிலையில், இத்தாலி, ஸ்பெயின், பிரான்ஸ் மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் தினமும் புதிய பாதிப்புகளின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்கிறது.

முதன் முதலாக பரவிய சீனாவில், இது வரை 81, 285 பேர் கொரோனாவால் பாதிப்பு அடைந்துள்ள நிலையில் அங்கு 3,287 பேர் உயிரிழந்துள்ளனர். சீனாவுக்கு அடுத்தபடியாக இத்தாலியில் மொத்தம் இதுவரை 80,600 பாதிக்கப்பட்ட நிலையில் உலகிலேயே அதிக எண்ணிக்கையில், அதாவது 8,215 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா வைரஸ் அமெரிக்காவில் கடந்த சில நாட்களாக மிக வேகமாகப் பரவி வருகிறது. அமெரிக்காவில் ஒரே நாளில் 18,000-க்கும் அதிகமான பேருக்கு கொரோனா தொற்றியது. சுமார் 1 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

இதன் மூலம் உலகிலேய கொரோனாவால் அதிகம் பாதிப்புக்கு உள்ள நாடாக அமெரிக்கா மாறியுள்ளது. எனினும், சீனா மற்றும் இத்தாலியை ஒப்பிடும் போது உயிரிழப்பு அமெரிக்காவில் குறைவாக உள்ளது. இதுவரை 1,177 பேர் கொரோனாவால் அங்கு உயிரிழந்துள்ளனர்!

 

 

0 Comments

leave a reply

Recent News