loader
அதிரடித் திட்டங்களை அறிவித்தார் பிரதமர்! இலவச இணையம்! மின்சாரக் கட்டணம் கழிவு! குடும்பத்துக்கு 1, 600 வெள்ளி!

அதிரடித் திட்டங்களை அறிவித்தார் பிரதமர்! இலவச இணையம்! மின்சாரக் கட்டணம் கழிவு! குடும்பத்துக்கு 1, 600 வெள்ளி!

 

புத்ராஜெயா: பிரதமர் டான் ஸ்ரீ மொகைதீன் யாசின் வெள்ளிக்கிழமை (மார்ச் 27) அனைத்து மலேசியர்களுக்கும் பயனளிக்கும் வகையில் சிறப்பு நிதியை ஒதுக்கியுள்ளர்.

அதன்  சிறப்பம்சங்கள் கீழே:

> சுகாதார அமைச்சின் திறனையும் வளங்களையும் அதிகரிக்க சுகாதார அமைச்சுக்கு RM500 மில்லியன்.

> சுகாதாரப் பணியாளர்களுக்கு ஏப்ரல் 1 முதல் தொற்றுநோய் முடிவுக்கு வரும் வரை ஒரு மாதத்திற்கு RM 400 -ஆக இருந்த அலாவுன்ஸை RM 600 ஆக அரசு உயர்த்துகிறது.

> போலீஸ், குடிநுழைவு, சுங்கத் துறையின் பணியாளர்களுக்கு ஒரு மாதத்திற்கு RM 200 கூடுதல் சிறப்பு நிதி இதுவும் தொற்றுநோய் முடிவுக்கு வரும்வரை.

> RM 4,000 க்கும் குறைவாக குடும்ப வருமானம் ஈட்டும் குடும்பங்களுக்கு RM1,600 வெள்ளி  உதவித்தொகை. ஏப்ரல் மாதத்தில் 1,000 வெள்ளியும்,  மே மாதத்தில் 600 வெள்ளியும் வழங்கப்படும்

> தனியார் தொழிலாளர்கள், விவசாயிகள் மற்றும் மீனவர்கள் உட்பட B40 மற்றும் M40 குழுவிற்கு ஒரு முறை பணம் செலுத்தும் தேசியப் பராமரிப்பு உதவி வழங்கப்படும். இதில் RM1,600 தொகை பெறும் நான்கு மில்லியன் குடும்பங்கள் RM 4,000 மற்றும் அதற்கும் குறைவாகச் சம்பாதிப்பவர்கள் .

RM 4,000 மேல்  சம்பாதிக்கும் குடுபங்களுக்கு  RM1,000 வெள்ளி.

அதே சமயம் 21 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய திருமணமாகாத 2000 மற்றும் அதற்கும் குறைவாக வருமானம் பெறுபவர்களுக்கு  RM 800, உதவித்தொகை வழங்கப்படும் .

RM 2,000 மற்றும் அதற்கு மேற்பட்ட வருமானம் பெறும் 21 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட திருமணமாகாத மலேசியர்களுக்கு RM 500 உதவித் தொகை வழங்கப்படும்.

> உயர் கல்வி மாணவர்களுக்கு RM 200  உதவித்தொகை.

> ஏப்ரல் முதல் MCO இறுதி வரை இலவச இணையம்

> டி.என்.பி. உடன் இணைந்து அரசு ஏப்ரல் மாதத்திலிருந்து ஆறு மாதங்களுக்கு ஒரு மாதத்திற்கு அதிகபட்சம் 600 கிலோவாட் வரை மின்சார பயன்பாட்டிற்கு 15% முதல் 50% வரை தள்ளுபடிக்கு RM530 மில்லியன் ஒதுக்கீடு செய்யும்.

> பிபிஆர் மற்றும் பொது வீட்டுவசதிக்கான வாடகை கட்டணம் ஆறு மாதங்களுக்கு கட்டத்
தேவையில்லை.

>  தக்காஃபுல்  காப்புறுதி பதிவாளர்கள், கோவிட் -19 ஸ்கிரீனிங் சோதனை செலவுகளை தலா RM 300 க்கு பரிசோதித்துக்கொள்ள  RM 8 மில்லியன் ஒதுக்கீடு.

> ஏப்ரல் 1 ஆம் தேதி தொடங்கி, சுமார் 120,000 இ-ஹெயிலிங் டிரைவர்களுக்கு RM 500 உதவி.

> அரசு மற்றும் பி.என்.எம் ஆகியவை SME மற்றும் மைக்ரோ தொழில்முனைவர்களுக்காக  RM 4.5 பில்லியன் கூடுதல் ஒதுக்கீடு.

> RM60  மில்லியன் ஒதுக்கீட்டில் நாடு முழுவதும் 120,000 ஈ-ஹெயிலிங் டிரைவர்களுக்கு  RM500. 

> ஜனவரி 1 முதல் வணிகத்தில் 50% வீழ்ச்சியுடன் உள்ள முதலாளிகளின் நிறுவனத்திற்கு ஒரு மாதத்திற்கு RM600   என முன்று மாதத்திற்கு 4,000 க்கும் குறைவான சம்பளம் உளள அவர்களின் தொழிலாளர்களுக்கு அரசாங்கம் உதவித் தொகை வழங்கும்.

> நிலையான பொருளாதார வளர்ச்சியை உறுதி செய்வதற்கான நோக்கத்துடன் ஈ.சி.ஆர்.எல், எம்.ஆர்.டி 2 மற்றும் தேசிய ஃபைபரைசேஷன் மற்றும் இணைப்புத் திட்டம் (என்.எஃப்.சி.பி) உட்பட பட்ஜெட் 2020 இல் ஒதுக்கப்பட்ட அனைத்து திட்டங்களையும் அரசு தொடரும்.

> அரசு ஓய்வூதியம் பெறுவோருக்கு RM 500  உதவித்தொகை!

0 Comments

leave a reply

Recent News