loader
RAP Porkalam: 8 சிறந்த போட்டியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்!

RAP Porkalam: 8 சிறந்த போட்டியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்!

கோலாலம்பூர், 26 மார்ச்  2020 – மலேசியாவின் முதல் தமிழ் ராப் போட்டியான, RAP Porkalam-இன் 8 சிறந்த போட்டியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அறிவிக்கப்பட்டனர். 

29 ஜனவரி முதல் 4 பிப்ரவரி 2020 வரை நடைப்பற்ற வாக்களிப்பில் சுமார் 327,000-க்கும் மேற்ப்பட்ட ஆன்லைன் வாக்குகள் அடிப்படையில் போட்டியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அறிவிக்கப்பட்டனர். போட்டியாளர்கள் பெற்ற வாக்குகள் பட்டியல் பின்வருமாறு:

போட்டியாளர்கள்
முதல் சுற்றில் பெறப்பட்ட வாக்குகளின் எண்ணிக்கை:
ரூபன் ராஜ் 33,806
சிஜேஎல் 28,618
சில்வர்ஸ்டேட் தமிழன் 26,307
ஈஷா 25,621
நரேன் ஜாக் 25,443
கேவின் 25,051
தேசல்தேக் 24,737
மதராசி 23,844

இதற்கிடையில், வாக்குகளில் சிறிய வித்தியாசம் அடிப்படையில் இரண்டாம் சுற்றுக்கு தகுதி பெற இயலாத தாரகை, சி.ஜே.சதீஷ், மிஸ்டா நேஷ், பூச்சி, ராகிக் விஷூன்,  லூசிபர், ஏ.கே.ஷோன் மற்றும் வீல்சார் ராப்பர் போட்டியை விட்டு வெளியேறினர்.
8 சிறந்த போட்டியாளர்களும் RAP Porkalam-இன் இறுதிச் சுற்றுக்கு தங்களை தகுதி பெறச்செய்ய இரண்டாம் சுற்றில் மிக கடுமையாகவும் விவேகமாகவும் போட்டியிடுவர். RAP Porkalam-இன் புதிய அத்தியாயங்களை ஒவ்வொரு சனிக்கிழமையும் இரவு 7 மணிக்கும் மற்றும் மறுஒளிப்பரப்பை ஞாயிற்றுக்கிழமை இரவு 9 மணிக்கும் விண்மீன் எச்.டி.  (அலைவரிசை 231), ஆஸ்ட்ரோ கோ மற்றும் ஆன் டிமாண்டில் கண்டு மகிழலாம். மேல் விவரங்களுக்கு, ஆஸ்ட்ரோ உலகம் அகப்பக்கத்தை வலம் வாருங்கள்!

0 Comments

leave a reply

Recent News