loader
பினாங்கில் ஒரு லட்சம் முகக் கவசத்தை இலவசமாக வழங்கிய ஷான் பூர்ணம் நிறுவனம்!

பினாங்கில் ஒரு லட்சம் முகக் கவசத்தை இலவசமாக வழங்கிய ஷான் பூர்ணம் நிறுவனம்!

பினாங்கு மார்ச்- 26

கோவிட்-19  வைரஸ் பாதிப்பால் நாட்டில் பொது நடமாட்ட கட்டுபாடு உத்தரவு வரும் எப்ரல் 14-ஆம் தேதி வரை  அரசாங்கத்தால் செயல்படுத்தப்பட்டுள்ளது. 

இந்நிலையில், நாட்டிற்காகவும் நாட்டு மக்களின் பாதுகாப்புக்காகவும் பணியில் இருக்கும் மருத்துவர்கள், மருத்துவ ஊழியர்கள், போலீஸ் ராணுவம், குடிநுழைவுத் துறை ஆகியோரின்  அர்ப்பணிப்பு பாராட்டுக்குரிய ஒன்று.

அந்த  வகையில், அவர்களின் பாதுகாப்பு கருதி,  பினாங்கில் 55 ஆண்டுகாலமாக செயல்பட்டுவரும் ஷான் பூர்ணம் நிறுவனம் இன்று பினாங்கு மாநிலத்தில் உள்ள அரசு மருத்துவமனை, செபராங் ஜெயா அரசு மருத்துவமனை, கூலிம் அரசு மருத்துவமனை, பினாங்கு போலீஸ் தலைமையகம், செபராங் பிராய்  போலீஸ் தலைமையகம், பினாங்கு நகராண்மைக் கழகம், ஊடகவியலாளர்கள் மற்றும் ஆதரவற்றோர் இல்லங்களுக்குச் சுமார் ஒரு லட்சம் முகக் கவசங்களை இலவசமாக வழங்கினர்.

 

இந்நிறுவனத்தின் இயக்குனர் டத்தோ செல்வகுமார் சண்முகம் செட்டியார் தனது குழுவுடன் சென்று அனைத்து முகக் கவசங்களையும்  வழங்கினார்.

தற்போது அரசு உழியர்கள், மக்களுக்காகப் பணியாற்ற  தியாக உணர்வோடு ஓய்வின்றி செயல்பட்டு வருகின்றனர். அவர்களும் நம்மில் ஒருவர்தான். எனவே, அவர்கள் பாதுகாப்பு மிக மிக அவசியம் என்பதைக் கருத்தில் கொண்டு, எங்கள் நிறுவனம் அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக இப்படி ஒரு முயற்சியில் இறங்கியுள்ளோம் என டத்தோ செல்வகுமார் சண்முகம் செட்டியார் தெரிவித்தார்!

0 Comments

leave a reply

Recent News