loader
நடிகர் விசு காலமானார்!

நடிகர் விசு காலமானார்!

நடிகர் விசு உடல்நலக் குறைவின் காரணமாக இன்று காலமானார். அவருக்கு வயது 73. இயக்குநர் கே.பாலச்சந்தரிடம் உதவியாளராக பணியாற்றிய விசு, இயக்குநர், நடிகர், கதாசிரியர், தயாரிப்பாளர் என திரைத்துறையின் பல முக்கியத் துறைகளில் திறமை வாய்ந்தவர்.

1941-ஆம் ஆண்டு பிறந்த விசு, திரைப்படம் தவிர்த்து மேடை நாடகம், தொலைக்காட்சித் தொடர், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்குவது எனக் கடைசி வரை பணியாற்றி வந்தவர்.

குடும்பக் கதைகளை மையமாக வைத்து இவர் இயக்கிய 'சம்சாரம் அது மின்சாரம்' திரைப்படம் பெரும்பாலான இந்திய மொழிகளில் மீண்டும் எடுக்கப்பட்டுள்ளது.

ரஜினிகாந்த் உடன் 'மன்னன்', 'உழைப்பாளி' உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கும் இவர்_ 'நெற்றிக்கண்' படத்தின் கதாசிரியராகவும் பணியாற்றியுள்ளார். அத்திரைப்படம் வெளியாகி வசூலைக் குவித்த நிலையில் தற்போது அந்தப் படத்தை தனுஷ் ரீமேக் செய்யவிருப்பதாகத் தகவலறிந்து அதற்கு எதிராக அறிக்கை வெளியிட்டிருந்தார் விசு.

கடந்த சில மாதங்களாகட் சிறுநீரகக் கோளாறு காரணமாகச் சிகிச்சை பெற்று வந்த அவர், இன்று சிகிச்சை பலனளிக்காமல்  உயிரிழந்தார்!

 

0 Comments

leave a reply

Recent News